உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

திருஞானசம்பந்தப் பிள்ளை (1849-1911)

யாழ்ப்பாணத்து நல்லூர் இவருடைய ஊர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், பொன்னம்பலம் பிள்ளை இவர்களிடத்தில் கல்வி பயின்றார். தர்க்க குடார தாலுதாரி என்னும் சிறப்புப் பெயர் உடையவர். பிற்காலத்தில் கும்பகோணத்திலும் சிதம்பரத்திலும் வசித்தார்.

இவர் இயற்றிய நூல்கள்: அரிகர தார தம்மியம். வேதாகம வாத தீபிகை நாராயண பரத்துவ நிரசனம், தர்க்காமிர்தம் (மொழி பெயர்ப்பு.) அச்சுதாநந்த சுவாமி (1850-1902)

வட ஆர்க்காடு மாவட்டம் போளுரில் பிறந்தவர். இவருடைய பழைய பெயர் அப்பாய் நாயுடு என்பது. கணக்காயராகத் தொழில் செய்தவர். வேலூரிலிருந்த வேங்கடகிருஷ்ண தாசர் என்னும் பெரியவரிடம் தொண்டராக இருந்தார். அவரால் அச்சுத தாசர் என்று பெயர் சூட்டப்பட்டார். பிறகு கடாமூர் நிசாநந்தர் என்னும் பெரியாரிடம் சீடரானார். அவரால் அச்சுதாநந்தர் என்று பெயரிடப்பட்டார். நிசாநந்தர்மீது இவர் “நிசாநந்தர் பதிகம்” பாடினார். இவர் இயற்றிய நூல்கள்: பிரகலாத சரித்திரம், துருவ சரித்திரம், சக்குபாய் சரித்திரம், தோத்திர இசைப்பாடல்கள், சன்மார்க்க தர்ப்பணம், அத்வைத கீர்த்தனாநந்தலகரி.

பிச்சுவையர் (1850-1910)

சேதுநாட்டு வேம்பத்தூரில் பிறந்தவர். சிலேடைச் செய்யுள் பாடுவதில் வல்லவர். பாற்கர சேதுபதி, சிவகெங்கை முத்து வடுகநாத துரை, ஊற்றுமலை இருதாலய மருதப்பதேவர், முறையூர் பழ. சி. சண்முகம் செட்டியார் முதலியவர்களால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் இயற்றிய நூல்கள்: முத்து வடுகநாத துரைமீது காதல் பிரபந்தம், திருப்பரங்குன்றம் முருகன் ஆநந்தக் களிப்பு, பனங்குடிப்பெரிய நாயகிஅம்மை பதிகம், சங்கராசாரியார் பதிகம். பொன்மாரிச் சிலேடை வெண்பா, மதுரை நிரோட்டக யமக வந்தாதி, குன்றக்குடி சண்முகநாதர்

உலா.

மு. ரா. அருணாசலக் கவிராயர் (1852-1939)

இவர், இராமலிங்கக் கவிராயரின் மகனார். பாண்டி நாட்டுச் சேற்றூருக்கு அருகில் உள்ள முகவூரில் பிறந்தவர். சுப்பிரமணியக்