உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

(மைடியர் பிரதர் - My dear brother. மதர் - Mother. ஐடில் - Idle. ஸைடில்- Side. லேடி- Lady. ஒய்டான – Wide. ரோட் - Road.) “ஆர்டா, எசமான்வீட்டின் அண்டையில் இடைவி டாமல் கார்டுசெய் சிப்பாய் வாடா: கடுகியே சென்று உந்தன் லார்டான பிரதாப சந்திர லட்சுமி புத்திரற்கிக்

கார்டையுங் கொடுத்து நீதான் கவனமாய்ப் பதில் சொல்வாயே”

(கார்டு- Guard. லார்டு - Lord. கார்டு - Card.)

சேலம் இராமசாமி முதலியார் (1852-1892)

இவர் ஊர் சேலம். பெருநிலக் கிழாராக இருந்த சேலம் கோபாலசாமி முதலியார் என்பவர் நாமக்கல்லில் தாசில்தாராக இருந்தார். அவருடைய மகன் சேலம் இராமசாமி முதலியார்.

இராமசுவாமி முதலியார் தமது ஆறாவது வயதில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரின் மகனார் நாகலிங்க முதலியார் இல்லத்தில் தங்கிப் படித்தார். கதிர்வேல் உபாத்தியாயர் என்பவரிடம் ளமையில் கல்வி பயின்றார். கதிர்வேல் உபாத்தியாயர் சிறந்த வித்துவான். அன்றியும் நகைச்சுவையுடன் பேசுவதில் பேர் படைத்தவர். சேலம் இராமசுவாமி, இளமையிலேயே பல பண்டிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதோடு பல தமிழ் இலக்கியங்களைப் பற்றி யறியும் வாய்ப்புப் பெற்றார்.

இப்போது பிரசிடென்ஸி காலேஜ் என்னும் பெயருடன் உள்ள கல்லூரி அக்காலத்தில் மதராஸ் ஹைஸ்கூல் என்று பெயர் பெற்றிருந் தது. இராமசாமி அந்த உயர்தரப் பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றார். அந்தப் பாடசாலையில் கீழ்வகுப்புகள் எடுபட்ட பிறகு, பச்சையப்பன் உயர்தரப் பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு, பிரஸிடென்ஸி காலேஜில் சேர்ந்து படித்தார். தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிறந்து விளங்கினார். இக்கல்லூரியில் படித்தபோது, பவர் ஐயர் என்பவர் அச்சிட்ட சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் பாடமாக வைக்கப்பட்டது. அப்போது சிந்தாமணி காவியத்தின் சிறப்பையும் ஏனைய சங்க நூல்களின் மேன்மையையும் அறிந்தார். பி.ஏ. பரீட்சையில் தேறிய பிறகு, சட்டப் பரீட்சையிலும் தேறினார். 1876-இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஜில்லா

"