உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

கனகசபைப் பிள்ளை (1855-1906)

203

யாழ்ப்பாணத்து மல்லாகம் என்னும் ஊரவராகிய விசுவநாத பிள்ளை என்பவர் சென்னை கோமளேசுவரன் பேட்டையில் இருந்தார். அவர், சென்னைக் கல்வி இலாகாவில் பணியாற்றினார். அவர் உவின்ஸ்லோ ஆங்கிலத் தமிழகராதி எழுத உதவி செய்தவர்.

விசுவநாத பிள்ளையின் மகனார்

கனகசபைப்பிள்ளை.

கனகசபை பி.ஏ. பரீட்சையில் தேறி, வழக்கறிஞர் கல்லூரியிற் பயின்று, துரையில் சில காலம் வழக்கறிஞராக இருந்தார். பின்னர்ச் சென்னையில் அஞ்சல் இலாகாவில் உத்தியோகம் பெற்று அஞ்சல் நிலையங்களின் மேற்பார்வையாளர் ஆனார். ஓய்வு நேரங்களில் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தார். ஏட்டுச் சுவடிகளைத் தேடி டாக்டர் உ.வெ. சாமிநாதையர் அவர்களுக்குக் கொடுத்தார். தமிழ் இலக்கிய வரலாறு. தமிழ்நாட்டு வரலாறுகளை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சிகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் புறநானூறு என்னும் நூலை அச்சிட்டபோது, அதில் அரசர்களைப் பற்றிக் கூறும் இடத்தில் “துஞ்சிய” என்னும் சொல்லுக்குப் பொருள் விளங்காமல், கனகசபைப் பிள்ளையைக் கேட்க, பிள்ளையவர்கள் துஞ்சிய என்னும் சொல்லுக்கு விளக்கம் எழுதியுதவினார். அவ்விளக்கம் புறநானூறு முதற்பதிப்பின் இறுதியில் அச்சிடப்பட்டது.

‘மதராஸ் ரெவ்யூ' என்னும் ஆங்கில இதழில், தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் அக்கட்டுரைகளைத் தொகுத்து 'TheTamils 1800 years ago' என்னும் பெயருள்ள நூலாக அச்சிட்டார். இந்நூல் தமிழறியாத ஏனைய நாட்டவரும் ஐரோப்பியர் முதலிய மேல் நாட்டவரும் தமிழ் மொழியின் பழைமையையும் தமிழரின் பண்பாட்டையும் தெரிந்து கொள்ளப் பேருதவியாக இருந்தது. இவர் தமிழ்நூல்களைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளாவன:

'The Indian Antiquary' என்னும் ஆங்கிலத் திங்கள் இதழில் Tamil Historical Texts என்னும் தலைப்பின்கீழ்க் கீழ்க்கண்ட கட்டுரைகள் எழுதினார்: