உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

205

பயின்றார். சிலேடைப்புலி பிச்சுவையருடன் நட்புள்ள வர். முறையூர் சி. சண்முகஞ் செட்டியார் என்னும் பிரபுவினால் ஆதரிக்கப்பட்டவர். பல தனிநிலைச் செய்யுட்களை இயற்றினார்.

இவர் இயற்றிய நூல்களாவன. காரிகை வெண்பா, கோட்டி மாதவன் பிள்ளைத் தமிழ், சிவபுர மான்மியம், சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத் தமிழ், செந்நெற்குடி சண்முகநாதன் பிள்ளைத் தமிழ், வால நைடதம், விசய சிந்தாமணி.

மகா வித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை

(1858-1905)

சென்னையில் வாழ்ந்தவர். புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், கோமளபுரம் உரையாசிரியர் இராசகோபால பிள்ளை இவர்களிடம் கல்வி பயின்றார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் “மகா வித்துவான்” என்னும் பட்டம் பெற்றவர்.

தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் பாடசாலையிலும், திருமயிலை சென்தோம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தார். "மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதலிய அக்காலத்துப் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர்.

66

وو

وو

"மணிமேகலை என்னும் காவியத்தை முதன் முதல் அச்சிட்டவர் இவரே. 1894-ஆம் ஆண்டில், சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலையில் இந்நூலைப் பதிப்பித்தார். (இவர் பதிப்பித்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் மணிமேகலையைப் பதிப்பித்தார்கள். எக்காரணத்தாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் மணிமேகலை பதிப்பித்ததைப் பற்றிக் கூறவேயில்லை.)

னால்,

மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள், திருமுல்லை வாயிற் புராணம், திருமயிலை உலா, சிற்றிலக்கண வினாவிடை, கந்தபுராண வசனம், கபாலீசர் பஞ்சரத்தினம், கற்பகவல்லி மாலை முதலிய நூல்களை இயற்றினார்.

இவர் இயற்றிய உரை நூல்கள். கம்பராமாயண அயோத்தியா காண்ட உரை (1891), பொன்வண்ணத்தந்தாதி, திருக்கயிலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பிச்சாடன நவமணி மாலை என்னும் நூல்களுக்கு உரை எழுதினார்.