உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

225

வாக்குண்டாம், நல்வழி இரண்டுக்கும் உரை எழுதினார் (1841); பழமலையந்தாதிக்கு உரை எழுதினார்: (1832), திருக்குறளுக்கும் உரை எழுதினார் (1875), திருவள்ளுவமாலை நாலடி நானூறு, திருவெங்கைக் கோவை என்னும் நூல்களுக்கும் உரை எழுதினார். நைடதம் (கைக்கிளைப் படலம் வரையில்), பிரபுலிங்கலீலை (மாயை யுற்பத்திப் படலம் வரையில்) இவற்றுக்கும் உரை எழுதினார்.

(குறிப்பு: இவர் முடிக்காமல் விட்ட உரைகளை இவருடைய மகனாரான கந்தசாமி ஐயர் உரை எழுதி முற்றுவித்தார். நைடதம் (மாலைப்படலம் முதல் இறுதி வரையிலும்), பிரபுலிங்கலீலை (மாயை பூசைகதி முதல் வசவண்ணர் வந்தகதி வரையில்) இவைகளுக்கு உரை எழுதினார். அன்றியும் கந்தசாமி ஐயர் திருவாதவூரர் புராணத்திற்கும் உரை எழுதினார்.)

சாமிநாதப் பிள்ளை

புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை புதுச்சேரியில் பிறந்தவர், R. C. எல்லிஸ் துரைக்குத் தமிழாசிரியர். ஞானாதிக்கராயர் காப்பியம் என்னும் நூலைச் செய்யுளாக இயற்றினார். சேசு நாதர் பிள்ளைத் தமிழையும் இயற்றினார். சேசுநாதர் பிள்ளைத்தமிழ், தஞ்சைமாநகரம் வித்துவான் அருளப்ப முதலியாரால் 1864-ஆம் ஆண்டில் சென்னையில் அச்சிடப்பட்டது.

சிதம்பா சுவாமிகள்

திருப்போரூர் சரவண தேசிகரின் மாணவர் இவர். இவர் இயற்றிய நூல்கள், குமாரதேவர் நெஞ்சுவிடுதூது, குயிற்பத்து, மீனாட்சியம்மை கலிவெண்பா, பஞ்சாதிகார விளக்கம், சரவணதேசிகர் கலித்துறை, சரவணதேசிகர் மாலை, சரவணதேசிகர் இரட்டை மணிமாலை, சரவணஞானியார் ஒருபா ஒரு பஃது, சரவணசற்குரு மாலை, தோத்திரப் பிரபந்தத்திரட்டு (1897)

இ. சாமுவேல் பிள்ளை

இவர் வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இவர், தொல்காப்பிய நன்னூல் என்னும் பெயருள்ள இலக்கண நூலை எழுதி 1858-ஆம் ண்டு அச்சிற் பதிப்பித்தார். தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிக் கூறுவது இந்நூல். புதுவைத் தமிழ்ப் புலவர் பொன்னுசாமி முதலியார். தரங்காபுரம்