உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இவ்வுரை அச்சிடப்படாமற் போயிற்று. இவ்வுரையும் நீதிநூல் மூலமும் 1892-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன.

தானியல் பிள்ளை

உறு

இவர் கிறிஸ்துவர். தரங்கம்பாடியில் ஒல்லாத்து அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். நாள்தோறும் ஒரு மணிக்கூ கிறிஸ்து சமய சம்பந்தமான நூல்கள் எழுதுவது என்று உறுதி செய்துகொண்டு அதன்படி நாற்பது ஆண்டு எழுதினார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்கள்: பரமன்டலங்களில் தங்கள் பொக்கிஷம் உண்டென்றிருக்கிற

பராபரனுடைய

பிள்ளைகளின் ஆபரணப்பெட்டி. இது சென்னை வேப்பேரியில் 1800- இல் அச்சிடப்பட்டது. சன்மார்க்க விளக்கம் (1810), ஏசுநாதர் பாடுபட்ட சரித்திரத்தியானம் (இரண்டு பாகம் 1835), ஞான முசிப்பாறு நேரம் (1841), ஞான உபதேச விளக்கம் (1853) இந் நூல்களை ஜர்மனி மொழியிலிருந்து மொழிபெயர்த் தெழுதினார்.

திருச்சிற்றம்பல தேசிகர்

கம்ப ராமாயண வசனம். உத்தரகாண்ட வசனம் இவற்றை 1815- ஆம் ஆண்டில் எழுதினார். இலக்கணநூல் ஒன்றை வசனமாக எழுதினார்.

திருப்பாற்கடல் நாதன்கவிராயர்

இவர் திருநெல்வேலியிலிருந்த மகா வித்துவான் முத்து வீரிய உபாத்தியாயரின் நண்பர். முத்துவீரிய உபாத்தியாயர் இயற்றிய முத்துவீரியம் என்னும் இலக்கண நூலுக்கு இவர் உரை எழுதினார். இரேனியூஸ் ஐயர் என்னும் பாதிரியாரின் நண்பர். பாதிரியார் 1838-இல் காலமானபோது அவர்மீது இரங்கற்பாபாடினார். இவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. உ.வே. சாமிநாதையர் இவரிடத்திலிருந்தும் பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கொங்குவேள் மாக்கனத முதலிய ஏட்டுச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டார்.

திருவேங்கடம் பிள்ளை

பிரமபுரி இவரது ஊர். வேலூர் அமெரிக்கன் மிஷன் பாலிகா பாடசாலையில் தமிழ்ப் புலவராக இருந்தவர். காலப் புத்தகம் எழுதி அச்சிட்டார். நந்த மண்டல சதகத்துக்கு உரை எழுதினார். நந்த மண்டல