உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தேவராச பிள்ளை

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர் களின் மாணவர் இவர். சூதசங்கிதை, தணிகாசல மாலை, சேடமலை மாலை, பஞ்சாக்கர தேசிகர் பதிகம், பஞ்சரத்தினம், கு சேலோ பாக்கியானம் என்னும் நூல்களை இயற்றினார்.

நயினார் முகம்மது பாவாப் புலவர்

இவருக்குச் சொர்ணகவி என்னும் சிறப்புப் பெயர் உண்டு. கி.பி. 1852-இல் வாழ்ந்திருந்தவர். செய்குதாவூது வலிவுல்லா பேரில் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். கியாமத்மாலை, கொம்பு-ரவ்வு இல்லா வண்ணம், வழி நடைச்சிந்து என்னும் செய்யுள்களையும் இயற்றி யுள்ளார்.

நாராயணசாமிப் பிள்ளை (தி. கோ.)

பெங்களூர் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். இராமா யண வெண்பா என்னும் செய்யுள் நூலையும், மாமி மருகியர் வாழ்க்கை என்னும் வசன நூலையும் எழுதினார்.

பரமசிவத் தம்பிரான்

தருமபுர ஆதீனத்துத் தம்பிரான் சுவாமிகளில் ஒருவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்குத் தமிழ்க் கல்வி புகட்டி வந்தார். இலக்கணத்தில் வல்லவர். செய்யுள் இயற்றுவதிலும் சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர். திருவாவடு துறை யாதீனத்து மகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த சுப்பிரமணிய தேசிகர் (1833-1888) மீது மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றினார்.

பள்ளிகொண்டான் பிள்ளை

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவருக்கு எதிராஜ தாசர் என்னும் பெயரும் உண்டு. சென்னைப் புரசைப் பாக்கத்தி லிருந்த அட்டவதானம் சபாபதி முதலியாரிடம் தமிழ் பயின்றார். செய்யுள் இயற்றும் வல்லமை படைத்தவர்.

இவர் இயற்றிய பிரபந்த நூல்கள்: மணவாள மாமுனிகள் நான்மணிமாலை, எதிராச மாமுனிகள் நான் மணிமாலை, நம்மாழ்வார்