உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

237

புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சிதம்பரம், இராமலிங்கம் பிள்ளை (அருட்பா இராமலிங்க சுவாமிகள்), சேமங்கலம் வித்துவான் நாராயண முதலியார், திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜ சேகரர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் ஆதீனம் முத்துக் குமாரசுவாமிகள், பிறசை அருணாசல சுவாமிகள் மாணாக்கராகிய கா. ஆறுமுகநாயகர், தஞ்சை குப்புசாமி நாயக்கர், தஞ்சை ஆறுமுகப் பிரமம். தஞ்சை நாராயணப் பிரமம், வித்வாசிகாமணி அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் முதலியோர்.

இவ்வுரை நூலுக்கு,

நூலுக்கு, சிதம்பரம் இராமலிங்கம்பிள்ளை (பிற்காலத்தில் அருட்பா இராமலிங்க சுவாமிகள்) அளித்த ‘சாற்றுகவி’ இது:

நலங்கொள்சிவ யோகமணம் நாற்றிசையு மணக்கும் ஞானமணங் கந்திக்கும் மோனமண நாறும் விலங்கலில்சித் தாந்தமணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணங்கமழும் வேதமணம் வீசும் தலங்கொளுமெய் யத்துவிதத் திருமணமும் பரவும் தனிமுத்துக் கிருட்டிணப்பேர் தங்கியநம் பிரமம் வலங்கொளு நன்னிட்டானு பூதியெனு நூற்கே

வாய்மலர்ந்த வுரையெனுமோர் மாமலரி னிடத்தே.

இவ் வுரைப் பதிப்பில், அச்சுக் குறியீடுகளுக்குக் கீழ்க் கண்ட பெயர்கள் கூறப்படுகின்றன: “இந் நூலுரையிலே காட்டப்பட்ட குறிகள்:-, இம்முளை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும், இச்சிறு கீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும், இப்பெருங் கீற்றுப் பதசாரத்துக்குப் பின்னும், ( ) இவ்விரு தலைப்பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்துமுற்றுச் சொல்லுக்குப் பின்னும், ( ) இவ்விருதலைப் பகரந்தாத்பரியத்துக்கும். இத்தாரகை அடியிற்காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.'

முத்துகுமரப்ப கவி

وو

புதுவைத் திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் என்னும் நூலை - இவர் இயற்றினார். இந்நூல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதா என்பது தெரிய வில்லை. இதன் கையெழுத்துப் பிரதிசென்னை அரசாங்கத்துக்