உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19, 20 - ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர் பலர் பெரும்புலவராக 20-ஆம் ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் நூல்களை எழுதியது, பெரும்பாலும் 20- ஆம் நூற்றாண்டு ஆதலால் அவர்களின் வரலாற்றை இங்குச் சேர்க்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நூலியற்றிய புலவர்களில் சிலர் பெயரைக் கீழே தருகிறேன்.

டாக்டர் உ.வே. சாமிநாதையர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) தேசத் தொண்டர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936), கனகசுந்தரம் பிள்ளை (1863-1922), செல்வ கேசவராய

-

முதலியார் (1864 1921), திருப்பாதிரிப் புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (1973-1942), செந்தில் நாயக அடிகள் (1884-1942), துடிசை கிழார் சிதம்பரனார் (?-1954), முத்து சாமிக்கோனார் (1854-1944), வெ.ப. சுப்பிரமணிய முதலியார் (1857-1946), 1947), முத்மிழ்ப் பேராசிரியர் விபுலானந்த அடிகள் (1892 மறைமலையடிகள் (?-1950) செய்குத் தம்பிப் பாவலர் (?-1950) தி.பொ. பழனியப்பப் பிள்ளை (1893-1951) கா.ர. கோவிந்தராச முதலியார் (1874- 1952) திரு.வி.கலியாணசுந்தர முதலியார் (1883-1953), பா.வே. மாணிக்க நாயகர் (1871-1931), பூரணலிங்கம் பிள்ளை. (1866-1947), பண்டித மணி கதிரேசச் செட்டியார் (1881-1953), கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954), டி.கே. சிதம்பரநாத முதலியார் (1882-1954), பாண்டித் துரைத் தேவர் (1867-1911), கா. நமச்சிவாய முதலியார் (1876-1937), பண்டித சுவரிராய பிள்ளை (1859-1923), ஆ.மாதவையர் (1870-1925), ஸர்.பொன்னம்பலம் இராமநாதன் (1851-1930), அ. சிங்காரவேலு முதலியார் (1855-1931), சாணாங்குப்பம் இராமநாத பிள்ளை (1877-1938), தி.இலக்குமணப்பிள்ளை (1864-1950), மா.அ. கனகசபை முதலியார்