உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்க்கணக்கு நூலாராய்ச்சி

(இந் நூல் 85, 89-ஆம் பக்கத்தில் கூறியுள்ள ‘கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றிய தொடர்புரை.)

18,19-ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிக்கக் கூடாது என்னும் கொள்கை படித்தவர்களிடையே பரவிற்று. சமயப்பற்றுக் காரணமாகத் தோன்றிய இந்தக் கொள்கையினாலே, தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த நூலைப் பாடஞ்சொல்லாமல் விட்டனர். இதனால் அந்த, நூல்கள் மறக்கப்பட்டுக்கிடந்தன. படிப்பாரற்றுக் கிடந்தமையால் அந்நூல்களின் பெயர்கூட மறக்கப்பட்டிருந்தன. சென்ற 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது பற்றிப் படித்த புலவர்களுக்குள்ளே ஐயங்களும் வாதப் பிரதிவாதங்களும் நடந்தன! கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டின் பெயர்களைப் பற்றியதே அந்த ஆராய்ச்சி! அந்த ஆராய்ச்சி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நடந்த பின்னர் ஓய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இது ஒரு சுவையுள்ள கட்டம். இதுபற்றி இங்குக் கூறுவோம்.

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் முன்னமே கூறியுள்ளார்.

“நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே சிறுவெண் பாட்டின் அளவெழு சீரே”

என்னும் தொல். பொருள், செய்யுள் 470-ஆம் சூத்திரத்தின் உரையில் பேராசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:-

இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற்சான்றோருமெனக் கொள்க.

மேலும்,