உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

265

அங்ஙனமாயின் முப்பாலென்றது ஒரே நூலாகவும், இன்னிலை சொல்லென்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும் கைந்நிலையென்றது வேறொரு தனி நூலாகவுங் கொள்ளத்தகும். இவ்வாறு கொள்ளிற் ‘கைந்நிலையோடாங் கீழ்க்கணக்கு என்று ஈற்றடிப் பாடந் திரிதல் வேண்டும். எட்டுத் தொகை பதினெண் கீழ்க்கணக்குகளுள் இன்னும் அச்சிற்றோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களுள், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஒர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கின்றேன். அவ்வாறு போய்த் திரும்பிய பின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்.

மேலே காட்டிய மேற்கோள் சற்று விரிவாக இருந்த போதிலும் அது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதில் கருத்து வேற்றுமை இருந்ததைத் தெளிவாக விளக்குகின்றது. மேற்காட்டிய மேற்கோளில், "ஐந்திணை என்றது ஐந்திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள் எனக் கூறி, ஐந்திணையைம்பது ஐந்திணை எழுபது திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது இந்நான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தனவென்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டுமென்றும் சொற்றனர்” என்று கூறப்பட்டுள்ளதை மறுத்துக் கூறினார் செல்வகேசவராய முதலியாரவர்கள். பதினெண் கீழ்க் கணக்குகளில் ஒன்றாகிய ஆசாரக் கோவையை 1893-ஆம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த முதலியாராவார்கள், அதன் பதிப்புரையில் இதுபற்றி இவ்வாறு எழுதியுள்ளார்.

66

"ஐந்திணை என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்: ஐந்திணை ஐம்பது முதலிய நான்கையும் போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்பர் ஒருதிறத்தார். இலக்கண விளக்க முடையார், ‘உரிப்பொருடோன்ற வோரைந்திணையும், தெரிப்பதைந் தின ணைச் செய்யுளாகும்' என்றைந்திணைச் செய்யுளின் இலக்கணத் தைக் கூறினாரல்லது, அவ்விலக்கணமுடைய நூல்களை இன்ன இத்துணைய என வரையறுத்தாரில்லை. கீழ்க்கணக்கைப் பதினெட் டாகச் சரிவரக் காட்டுதற் பொருட்டு ஐந்திணைச் செய்யுட்கள் ஐந்தென்று கூறுவார்க்குப் பற்றுக்கோடாகின்ற ஆதாரம் இதுகாறும் ஒன்றுங் கிடைத்திலது.’

وو