உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

என்று கூறுகிறது. (நன்னூல், எழுத்தியல் 43-ஆம் சூத்திரம்.)

இவ்விலக்கணச் சூத்திரங்களின்படி குற்றெழுத்துக்களாகிய எகர ஒகரங்கள், மெய்யெழுத்துக்களைப் போலவே புள்ளியிட் டெழுதப்பட வேண்டும்.

எ ஒ கெ கொ ங்ெ ஙொ செ சொ ஞ்ெ ஞொ டெ

டா ணெ ணெெ ணொ த தொ முதலியன. இக் காலத்து

இவ்வெழுத்துக்கள் எ ஒ கெ கொரெ கெ கொ ஙெ ஙொ செ சொ ஞெ ஞொ டெ டொ ணெ ணொ தெ தொ என்று எழுதப்படுகின்றன.

பழைய இலக்கண நூல்கள் எல்லாம் ஒரே புள்ளியைக் கூறுகின்றன. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இருந்தவராகிய வீரமாமுனிவர் என்னும் இத்தாலி தேசத்தவர், தாம் இயற்றிய தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலிலே.

“நீட்டல் கழித்தல்

குறின்மெய்க் கிருபுள்ளி”

ஒகரக்

என்று சூத்திரம் செய்தார். நீண்ட புள்ளி என்றும் கழித்த புள்ளி என்றும் இரண்டுவித புள்ளியைக் கூறுகிறார். எகர குற்றெழுத்துக்கு நீண்ட புள்ளியையும் மெய்யெழுத்துக்களுக்குக் சுழித்த புள்ளியையும் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார் உதாரணம் எரி, ஒதி, மண் கண் ஆனால் இவர் கூறிய முறையை, பெரும்பான்மையோர் எற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

1828-ஆம் ஆண்டு வெளிவந்த தாண்டவராய முதலியார் இயற்றிய இலக்கண வினாவிடை என்னும் நூலிலே இதனை நன்கு விளக்குகிறார்:

66

வ்வெழுத்துக்களுள் வேறுபாடில்லாமல் சமான வடிவாக வழங்குகின்ற வெழுத்துகட்கு வேறுபாடறியு மடையாளமெது?

எ ஒ என்னு முயிர்க் குற்றெழுத்தும் இவ்விரண்டு மேறின கொ முதலிய உயிர்மெய்க் குற்றெழுத்தும்க்ங் ங் முதலிய மெய்யெழுத்தும் மேலே. இப்படியொரு புள்ளியிட்டெழுதப்படும்.

வரலாறு.

எவன். ஒப்பு, கெண்டை, கொண்டை- இவைகளுக்குள்ளே

மெய்யெழுத்துக்கும் புள்ளியிட்டெழுதினமை காண்க.