உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இதைப்பற்றி வீரமா முனிவர் தாம் லத்தின் மொழியில் எழுதிய ‘கொடுந்தமிழ்’ இலக்கணத்தின் முதல் அதிகாரத்தில் இவ்வாறு எழுதுகிறார். அதன் தமிழ் ஆக்கம் வருமாறு:

66

எகரக் குற்றெழுத்தும் ஏகார நெட்டெழுத்தும், ஒகரக் குற்றெழுத்தும் ஒகார நெட்டெழுத்தும், குறில் நெடில் வேறுபாடுகளைக் காட்டும் அடையாளம் இல்லாமல், ஒரே விதமாக எழுதப் படுவதால், தமிழர் குற்றெழுத்து நெட்டெழுத்து என்னும் வேறுபாட்டினைப் பிரித்தறியும் பொருட்டு, குற்றெழுத்துக்களின்மேல் புள்ளி வைத்தும் நெட்டெழுத்தின்மேல் புள்ளி வைக்காமலும் எழுதும்படி கற்பிக் கிறார்கள். ஆகவே, மெய் என்னும் சொல்லில் உள்ள கொம்பின்மேல் புள்ளி வைக்காதபடியால் மேய் என்று படிக்கப்படுகிறது. மெய் என்னும் சொல்லில் கொம்பின்மேல் புள்ளி வைத்திருக்கிறபடியால் அது மெய் என்று படிக்கப்படுகிறது. அப்படியே பொய் என்னும் சொல்லில் கொம்பு புள்ளி பெறாதபடியால் போய் என்று படிக்கப்படுகிறது. பொய் என்பதில் கொம்பு புள்ளி பெற்றிருப்பதனால் பொய் என்று படிக்கப்படுகிறது. ஆனால், இந்தப் புள்ளிகள் வைத்து எழுதுவதை நான் பெரும்பாலும் பார்த்ததில்லை. இஃது ஏடெழுது வோரின் அசட்டைத்தனமாக இருக்கலாம். இந்த எகர ஒகரக் குற்றெ ழுத்து நெட்டெழுத்துக்களின் வேறுபாட்டை எளிதாகத் தெரிந்து கொள்ளுதற்கு வேறொரு வகையை நான் கண்டறிந்தேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது பின்வருமாறு.

குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக எழுதப்படுகிற கொம்பு என்று சொல்லப்படுகிற ெஇந்த எழுத்தைக் குற்றெழுத்துக் காகவும், இந்தக் கொம்பையே மேலே சுழித்து ேஇவ்விதமாக எழுதுவதை நெட்டெழுத் துக்காகவும் அமைத்தேன். உதாரணமாக மெய், மேய் பொய், போய். இந்த முறை ஒப்புக்கொள்ளப்பட்டு அநேகரால் வழங்கப்பட்டு வருகிறது.

وو

இவ்வாறு எகர ஒகர உயிர்மெய் யெழுத்துக்களுக்குப் புதிய குறியீடுகளை வீரமாமுனிவர் அமைத்தபடியே இப்போது நாம் எழுதிவருகிறோம். 1828-ஆம் ஆண்டில் இலக்கண வினாவிடை எழுதிய தாண்டவராய முதலியார்.