உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

கீழே நீண்ட புள்ளியையும் வட்ட புள்ளியையும் பெற்றது எப்போது யாரால் என்பது தெரியவில்லை.

“நீட்டல் சுழித்தல்

குறின் மெய்க் கிருபுள்ளி

என்று வீரமா முனிவர் தமது “தொன்னூல் விளக்கம்" என்னும் நூலில் சூத்திரம் இயற்றினார். இதற்கு உதாரணம் எரி, ஒதி, மண், கண் என்பன. நீண்ட புள்ளியை எகர ஒகரக் குற்றெழுத்துக்கு இடவேண்டும் என்றும் சுழித்த புள்ளியை மெய்யெழுத்துக்கிட வேண்டும் என்றும் அமைத்தார். இதில் நீண்ட புள்ளி, சுழித்த புள்ளி என்பது தவிர மற்றப்படி பழைய இலக்கணத்துக்கு மாறுபட்டதன்று: அவற்றை யொட்டியதே. ஆனால் எகர ஒகரத்திற்கு மேற் புள்ளியை மாற்றி ஏகார ஒகாரத்துக்குக் கீழே நீண்ட கோட்டையும் சுழித்த புள்ளியையும் அமைத்தது யார்? எப்பொழுது? என்பது ஆராயற்பாலது.

ஏகாரநெட் டெழுத்துக்குக் கீழ்க்கோடு அமைத்தவர் வீரமா முனிவர் என்று கூறுவர். (Burnell's South Indian Paleography P. 5.)