உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

றவந்தரு பொன்னணை யெனுந்தண் ணதியோன்

றிசையிரு நான்கினுஞ் சென்று கவிந்து

செந்தேன் பில்கு பைந்தார்க் குவளையன்

வசையற வோங்கி மலிபெரும் புகழோன்

30

றன்னுயி ராமெனத் தண்ணளி புரிந்தே மன்னுயிர்த் தொகுதி மல்கப் புரப்போ னாழி பெயர்வுற் றகிலஞ் சிதைப்ப

வூழி பெயரினு முரைபிற ழாதோ

னகவை மூன்றுள மகவொன் றினுக்குப்

35

பெருமலைப் பாவை திருமலைப் பாறருஞ்

சேணுயர் சோலைத் தோணி புரத்தி

லொட்டார் நட்டா ருலகி லயலெனப்

பட்டா ரெனுமந் தரம்பா ராமே

நாடுந் துலைபோ னடுநின் றுய்க்கும்

40

பீடு பெறுநற் பிராட்டு விவாக

னாதி நாயக னடிபணிந் தேத்தும்

வேத நாயகனா மிகவல் லோனே.

ஆசிரியச் சந்த விருத்தம்

தாரு லாலிய மொய்ம்பனாடக தார்நேர்தரு செங்கையான் றாழ்வி லாவுருமாரன் விஞ்சு தயாள னண்புதழைந்துளான் நேரு லாவு பதாகையா னுலகேழு நீடிசை தங்குவான் யாவு மாயிணை யொன்றிலா தொளிரேக தேவை

யிறைஞ்சுவான்.

நீரு லாவு தடாக மெங்கு நிலாவு கின்ற குளந்தைவாழ் நிருபனு யிர்நதி மரபு தனில்வரு நிபுணன் வரகுண சிங்கமாஞ்

சீரு லாவிய வேத நாயக சீலன் நீதி சிறந்த தோர் தெளியு நூலினை யுதவினான்மதி தெளிஞர் யாரும்

வியக்கவே.