உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கல்விச் சங்கம்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசாண்ட காலத்தில் சென்னைப் பட்டினத்தில் சென்னைக் கல்விச் சங்கம் நிறுவப் பட்டது. ஆங்கில மொழியில் இந்தச் சங்கம் The College of Fort St. George என்று பெயர் பெற்றிருந்தது. 1812-ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட இந்தச் சங்கம் 1820 முதல் நன்றாக அலுவல் செய்யத் தொடங்கிற்று. முப்பது ண்டுகளுக்கு அதிகமாக அலுவல் புரிந்த இந்தச் சங்கம் 1854-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் தேதி மூடப்பட்டது.

அரசாங்க ஊழியம் செய்வதன் பொருட்டு இங்கிலாந்து தேசத்திலிருந்து நமது நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் இந்நாட்டு மொழிகளில் பயிற்சி பெறுவதற்காக இந்தச் சங்கம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் அமைந்திருந்த சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள் பேசப்பட்ட நாடுகள் அடங்கியிருந்தன. இம்மொழிகள் வழங்கும் நாடுகளில் அரசாங்க உத்தியோகஸ்தராக இருக்கும் ஆங்கிலேய உயர்தர அதிகாரிகள் ஒரளவு இந்த மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்றிருந்த படியால், அவர்கள் இந்த மொழிகளைக் கற்பதற்கு வாய்ப்பாக இச்சங்கம் அரசாங்கத்தாரால் நிறுவப்பட்டது.

இச்சங்கத்தின் சார்பில் அச்சியந்திர சாலையும், புத்தகவிற்பனை நிலையமும், நூல் நிலயமும் அமைந்திருந்தன. கர்னல் மக்கன்ஸி அவர்கள் தொகுத்து வைத்திருந்த ஒலைச்சுவடி நூல்கள் இந்தச் சங்கத்தின் பொறுப்பில் சிலகாலம் வைக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேய உத்தியோகஸ்தர் தமிழ் தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளைக் கற்பதற்காக இந்தச் சங்கம் நிறுவப்பட்டதென்று சொன்னோம். இந்த மொழிகளைக் கற்பிப்பதற்காக 'முனிஷி' என்னும் பெயருள்ள ஆசிரியர்கள் இச்சங்கத்தில் இருந்தார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில் அவ்வப்போது நடந்துவந்த நாட்டுமொழிப்