உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

و,

'இஃது, சாலிவாகன வருஷம் 1748-வது பார்த்திவ வருஷத்தில் மேற்படி கல்விச் சங்கத்து அச்சிற் பதிக்கப்பட்டது. A.D. 1826. S.S.1748.' தமிழ் ஹரிச்சுவடி: 1827-இல் அச்சிடப்பட்டது. இதன் முகப்புப் பக்கம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. "தமிழ் ஹரிச்சுவடி, ஆறாவது, பன்முகாண்டம். இந்த தமிழ் பாஷையில் திருத்தமான இலக்கண ஞானம் சம்பாதிக்கிறதில் தமிழ் மாணாக்கர்களுக்கு உதவ ஏற்படுத்திய கண்டமாலையில் ஒன்று.

“இது சென்னைக் கல்விச் சங்கத்து செக்கிரட்டேரி கேப்டன் ஹென்றி ஹார்க்னெஸ் துரையவர்களாலும் மேற்படி சங்கத்தில் தமிழ்ப்புலவர் திருவேங்கடாசல முதலியாராலும் செய்யப்பட்டது. சென்னபட்டணம் கல்வி சங்கத்து அச்சில் பதிப்பிக்கப்பட்டது. கிரிஸ்து ஆண்டு 18274. சாலிவாஹன சகாப்தம். 1749.'

994

கீழ்க்கண்ட நூல்களும் இந்தச் சங்கத்தில் அச்சிடப்பட்டன. எந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால், 1832- க்கு முன்பு அச்சிடப்பட்டன என்பது தெரிகின்றன.

செந்தமிழ் இலக்கணம்: இது, பெஸ்கி என்னும் வீரமா முனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கணத்தைப் பாபிங்டன் துரையவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டது. வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கணமும் இலத்தீன் மொழியிலேயே அச்சிடப்பட்டது.

வால்மீகி இராமாயணம்: உத்தரக்காண்டம், சென்னை கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்த சிதம்பர வாத்தியார் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.

நீதிநெறி விளக்கம்: குமரகுருபர சுவாமிகள் இயற்றிய இந்நூல். மதராஸ் சிவில் செர்விஸ் உத்தியோகஸ்தராக இருந்த கனம் ஸ்டோக்ஸ் அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிடப்பட்டது.

5

திருவள்ளுவர் குறள், நாலடி நானூறு: மூலம் மட்டும் இதில்

அச்சிடப்பட்டன.

இலக்கண வினாவிடை: கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழாசிரியராக இருந்த தாண்டவராய முதலியார் இயற்றியது.