உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

43

மொழிகளின் சாசனங்களும் வரலாறுகளும் இடம் பெற்றது போலவே தமிழ்ச் சாசனங்களும் வரலாறுகளும் இடம் பெற்றுத் தமிழகத்தின் வரலாறு, கலை, நாகரிகம் முதலியவை ஆராயப் பெற்றன.

தென் இந்திய சாசனங்கள் என்னும் சாசன வெளியீட்டின் முதல் தொகுதி 1890-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்னும் மூன்று மொழிகளிலுள்ள பழைய சாசனங்கள் இவற்றில் இடம் பெற்றன. இவற்றை ஆராய்ந்து வெளியிட்டவர் மேற்கூறப்பட்ட Dr. E. Hultzsch ஆவர். ‘தென் இந்திய சாசனங்கள்’ என்னும் வெளியீடு இன்றும் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இதுவரையில் பதின்மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. பழையசாசன எழுத்துக்களைப் படி எடுத்து படித்து ஆராய்ந்து வெளியிடுவது எளிய காரியம் அன்று. ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து படித்து, படி எடுத்து அச்சுப் புத்தகமாக அச்சிடுவதில் என்னென்ன துன்பங்கள் உள்ளனவோ அத்தனைத் துன்பங்களும் சாசனங்களை ஆராய்ந்து அச்சிடுவதிலும் உள்ளன. இந்தத் துன்பங்களையும் இன்னல்களையும் Dr. E. Hultzsch அவர்கள், ‘தென் இந்திய சாசனங்கள்' முதல் தொகுதியின் முகவுரையில் நன்கு விளக்கி எழுதியுள்ளார். அவர் எழுதியதன் தமிழாக்கத்தைக் கீழே தருகிறேன்:- ......myш பழைய காலத்துச் சாசனங்களை நன்றாகப் பதிப்பிப்பதற்குத் தேச பாஷைகளையும் வட மொழியையும் மேற்போக்காகக் கற்றுக்கொண்டால் போதுமானது என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. ஆனால், இந்த வேலையைச் செய்வதற்கு அந்தந்த மொழிகளைப் பற்றிய தேர்ந்த அறிவும், ஐரோப்பிய முறைப்படி கற்ற மொழிநூல் ஆராய்ச்சியும் இலக்கிய ஞானமும் வேண்டியிருப்பதோடு, 'சயன்ஸ்' என்னும் சாத்திரங்களை அறிவதற்கு இன்றியமையாமல் வேண்டியிருக்கிற உண்மையைக் காண வேண்டும் என்னும் ஆசையும், பொறுமையோடு கூடிய அக்கறையும் விருப்பமும் இந்த ஆராய்ச்சிக்கும் வேண்டியதாக இருக்கின்றன. திரு வெங்கை யாவைப்" போன்ற சுதேச இளைஞர்களான பல்கலைக்கழகப்பட்ட தாரிகள், கவனிக்கப்படாமல் இருக்கிற தென் இந்திய சாசன ஆராய்ச்சியைத் தாங்களும் மேற்கொண்டு ஆராய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக.

66