உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

45

இதனால், சாசன எழுத்துக்களைப் பெயர்த்தெழுதுவோர் அடையும் துன்பங்கள், ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிடுவோர் அடைகிற துன்பங்களைப் போன்றதே என்பது தெரிகிறது.

66

பழைய சாசனங்களை வெளியிடுவதன் நோக்கத்தை அதன் முதல் பதிப்பாசிரியராகிய Dr. E. Hultzsch அவர்கள் முதல் தொகுதியின் முகவுரையில் தெளிவாகக் கூறுகிறார். அது வருமாறு. இந்தத் தொகுதியை ஆயத்தப்படுத்தியதன் நோக்கம்; சாசனத்தில் உள்ள சிறு குறிப்புகளையும் உள்ளது உள்ளபடியே தவறில்லாமல் சரியானபடி பெயர்த்தெழுதுவது ஒன்று. ஒவ்வொரு சாசனத்தையும் ஆ ங்கிலத்தில்) மொழிபெயர்த்தெழுதுவது மட்டும் அல்லாமல், அவற்றிலிருக்கும் சரித்திரச் செய்திகளையெல்லாம் எடுத்து வேறு சான்றுகளுடன் ஒத்திட்டுப் பார்த்துத் தெளிவுபடுத்தி முடிவு காண்பதும், இவ்வாறு காணப்பட்ட முடிவைக்கொண்டு தென் இந்திய சரித்திரம் எழுத உதவி செய்வதும் இரண்டாவது நோக்கமாகும்."15

இவர் எழுதியது போலவே, இந்தச் சாசனங்களை ஆராய்ச்சி செய்ததன்பயனாகத் தென்னிந்திய சரித்திரமும் தமிழ்நாட்டுச் சரித்திரமும் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. முழுவதும் மறக்கப்பட்டு மறைந்து கிடந்த பல்லவ மன்னர் சரித்திரம் இப்போது பெருவாரியாகக் கிடைத்திருப்பதோடு பழைய காலத்துச் சேர சோழ பாண்டியர் குறுநில மன்னர் முதலியவர்களின் வரலாறுகளும் கிடைத்துள்ளன. இவை எல்லாம் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எபிகிராபி, ஆர்க்கியாலஜி இலாக்காக்களினால் நமக்குக் கிடைத்துள்ள நன்மைகளாகும்.

“இந்தியப் பழமை ஆராய்ச்சி”16 என்னும் ஆங்கிலத்திங்கள் இதழ் 1872-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியரான டாக்டர் ஜேம்ஸ்பர்கஸ் அவர்கள் இதைத் தமது சொந்தப் பொறுப்பில் நடத்தினார். பிறகு உடல் நலம் இல்லாத காரணத்தினால் ஆசிரியர் பொறுப்பை இவர் விட்டபொழுது, 1885- ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் டாக்டர் பிஃளீட்7 அவர்களும் காப்டன் டெம்பிள்8 அவர்களும் இதன் கூட்டாசிரியர்களாக இருந்து இதனை நடத்தினார்கள். 1892-ஆம் ஆண்டில்முன்னையவர் விலகிக்கொண்ட பிறகு பின்னையவர் இதன் ஆசிரியராக இருந்தார்.

"இந்தியப் பழமை ஆராய்ச்சி” என்னும் இதழ் வெளியிடப் பட்டதன் நோக்கம் என்னவென்றால் இந்தியத் தொல் பொருள்