உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்களின் வரிவடிவம்

தொன்று தொட்டுத் தமிழில் எண்களுக்குத் தனி வரிவடி வங்கள் இருந்தன. தமிழ் எண்களின் வரி வடிவங்கள் இவை:- க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ய, ள, தொன்று தொட்டு வழங்கி வந்த இந்த வரி வடிவங்கள், சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பிய எண்களின் வரிவடிவங் களாக மாற்றப்பட்டன. கிறிஸ்து சமய மிஷனரிமார்கள் 19- ஆம் நூற்றாண்டிலே நமது நாட்டிலே, பாடசாலைகளை அமைத்து ஐரோப்பிய முறைப்படிப் பாடங்களைக் கற்பித்தார்கள். ஐரோப்பிய நாட்டு முறைப்படி அவர்கள் நடத்திய பாடசாலைகளில் இலக்கியப் பாடத்தோடு, பூகோள பாடம், சரித்திர பாடம், இயற்கைப் பொருட் பாடம் முதலிய பாடங்களையும் கற்பித்தார்கள். கணக்குப் பாடம் கற்பித்தபோது, பழைய தமிழ் எண்கள் எளிதாக எழுதுவதற்கு வாய்ப்பாக இல்லாத படியால், எளிதாக இருந்த ஐரோப்பிய எண்களைப் புகுத்தினார்கள். புகுத்தப்பட்ட ஐரோப்பிய எண்கள் எழுதுவதற்கு எளிதாக இருந்தபடியால் அந்த வரிவடிவையே மற்றவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

மிஷனரிமார் புகுத்திய ஐரோப்பிய எண்களின் வரிவடி வங்கள். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 100, 1000 முதலியன. இந்த எண்களுக்கு அரபி எண்கள் என்பது பெயர். ஐரோப்பிய எண்கள் ஏன் அரபி எண்கள் என்று பெயர் பெற்றன? இந்தக் கேள்விக்கு விடை கூறவேண்டு மானால் ஒரு சரித்திர நிகழ்ச்சியையும் சொல்லித் தீரவேண்டும்.

அரபி எண்கள் என்று கூறப்படுகிற ஐரோப்பிய எண்கள் உண்மையில் ஐரோப்பிய எண்களும் அல்ல, அரபிய எண்களும் அல்ல. அவை பாரதநாட்டு எண்களே. பாரத நாட்டு எண்களை அராபியர் இங்கிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு போனார்கள். பிறகு அராபியரிடமிருந்து ஐரோப்பியர் கடனாகப் பெற்றுக் கொண்டு போனார்கள். அவர்கள். அராபியர் இந்தியரிடமிருந்து அவ்வெண் களின் உருவத்தைப் பெற்றுக் கொண்டதையறியாமல், தாங்கள் அராபியரிடமிருந்து பெற்றுக்கொண்டபடியால், அவற்றிற்கு அரபி