உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

CCLVIII என்று எழுதவேண்டும். இதில் M என்பது ஆயிரம். D என்பது ஐந்நூறு. C என்பது நூறு L என்பது ஐம்பது. VIII என்பது எட்டு. இவ்வாறு பண்டைக் காலத்தில் ஐரோப்பிய நாட்டார் எண்களை எழுதுவதில் துன்பப் பட்டனர்.

போன

இந்தியாவிலிருந்து அராபியர் கற்றுக்கொண்டு எண்களை எகிப்து முதலிய நாடுகளில் வழங்கினார்கள் என்று கூறினோம் அல்லவா? இத்தாலி தேசத்துப் பைசா நகரத்தவராகிய லியோனார்டோ பிஃபோனசி2 என்பவர், ஆப்பிரிகாக் கண்டத்தின் வடபகுதியில் வியாபாரத்தின் பொருட்டுத் தங்கியபோது, அந்நாட்டு முஸ்லிம்கள் வழங்கிய இந்திய எண்களைக் கண்டு, அவற்றைக் கற்றுக்கொண்டு போனார். போய், கி.பி. 1202-ஆம் ஆண்டில் அந்த எண்களை அமைத்து ஒரு கணித நூல் எழுதினார். அக்காலத்தில் கிறிஸ்துவராகிய ஐரோப்பியருக்கும் முஸ்லிம்களாகிய அராபிய ருக்கும் மதச் சார்பாகப் பெரும்பகை மூண்டிருந்தபடியினாலே, இந்தக் கணிதத்தைக் கிறிஸ்துவராகிய ஐரோப்பியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாளடைவில் பையப் பைய ஏற்றுக்கொள்ள வேண்டிய தாயிற்று. கி.பி. 1259-இல் பிளாரன்ஸ் நகரத்தில் ஒரு சட்டம் இயற்றி, அவ்வூர் பாங்கிகளில் இந்த அரபி எண்களினால் கணக்கு எழுதக் கூடாது என்று தடை செய்தனர். இவ்வாறு தடைகள் இருந்த போதிலும், கடைசியில் இந்த அரபி எண்கள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கி.பி. 1500-இல் அரபி எண்களினால் கணக்குப் புத்தகங்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன.

கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே நமது நாட்டில் வழங்கிய தமிழ் எண்களின் வரிவடிவத்தில் சிறு மாறுதல் ஏற்பட்டது. இந்த மாறுதலைக் கணித தீபிகை என்னும் சிறு நூலில் காணலாம். கணித தீபிகை, பண்டள இராமசாமி நாயக்கர் என்பவரால் 1825-ஆ ஆண்டில் எழுதப்பட்டது. இந் நூலின் முன் பக்கத்தின் வாசகம் இது: