உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இவ்வாறு விளக்குகின்றார். (இந்தக் குறிகள் 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நமது நாட்டில் வழங்கவில்லை.)

“அடியிலெழுதப்பட்ட குறிகள், கணிதக் கிரியை செய்யும் போது சுருக்கி யெழுதுவதி லுபயோகமான அடையாளங்கள்.

+

பிலுஸ், அல்லது கூட்டற் குறி. இது தனக் கிருபுறத்திலு மிருக்கிற சங்கியைகளைக் கூட்டத்தக்கதென்று காட்டும். வரலாறு: 12+3. இந்த மூன்றைப் பன்னிரெண்டுடனே கூட்ட வேண்டுமென்று காட்டும்.

- மீனுஸ் அல்லது கழிப்புக் குறி. இது தனக்கு வலப்புறத்தி லிருக்கிற சங்கியையை தன்னிடப்புறத்திலிருக்கிற சங்கியையி லிருந்து எடுத்துப் போட வேண்டுவதென்று காட்டும். வரலாறு: 12-3. இது மூன்றை 12-இல் கழிப்பதென்றாயிற்று.

3

பெருக்கல் குறி. இது தனக்கிருபுறத்திலுமிருக்கிற சங்கியை களை யொன்றை மற்றொன்றாலே பெருக்குகிறதெனக் காட்டும். வரலாறு. 12x3. இங்கே பன்னிரண்டினுடைய குணிதம் மூன்றினாலே என்றாயிற்று. என்றால் பன்னிரண்டை மூன்றாலே பெருக்கென்பதாம்.

5

ஈவுக் குறி. இது பாச்சியத்துக்கு4 வரும் ஈவு பாச கத்தா லென்று.' பாசகத்தைப் பாச்சியத்தின் கீழேயெழுதிப் பின்னாம் சத்துக்கு நடுவே யெப்படிக்குக் கீற்றுக் சீறுகிறதோ அதுபோல நடுவிலே கீறப்படும். வரலாறு:12/3 இந்தப் பன்னிரண்டுக்கு வரும் ஈவு மூன்றினாலே யென்று காட்டு கிறது. அது பன்னிரண்டை மூன்றினாலே பங்கிடு, அல்லது 3- பேருக்குக் கொடு என்றாயிற்று.

= எக்குவால். அல்லது சமக்குறி. இந்த ரேகை தனக்கொரு புறத்திலிருக்கிற எண்களினாலே செய்யப்பட்ட கிரியை யினுடைய பலம் தனக்கு மற்றொரு புறத்திலிருக்கிற எண்ணுக்குச் சமானமென்று காட்டும். வரலாறு:

12+3=15

12 3=36

12-3=9

12/3=4

சென்னை மாகாண ஆட்சிக் கைப் புத்தகம். 2-ஆம் தொகுதி யில் 245-ஆம் பக்கத்தில் இது பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதன் கருத்து இது: “தமிழ் எண்களின் குறியீடுகள் கிரேக்க, ஹீப்ரு மொழிகளின் எண் குறியீடுகளைப் போலக் குறைபாடுள்ளவை. தமிழ்