உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

59

இதில் தமிழ் எண்கள் விரைவாக எழுதுவதற்கு வாய்ப்பாக இல்லாமல் இருப்பது தெரிகிறது. இந்த எண்களைவிட ஐரோப்பாக் கண்டத்திலிருந்து வந்த அரபி எண்கள் விரைவாக எழுதுவதற்கு எளிதாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறபடியால், அரபி எண்களையே இப்போது பயன்படுத்துகிறோம். இது சென்ற 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல் ஆகும். இந்த மாறுதலைக் கிறிஸ்துவப் பாதிரி மார்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் செய்தார்கள்.

அடிக்குறிப்புகள்

1. பாரத நாட்டில் வழங்கி வந்த எண்வடிவங்களைப் பாரசீகர் எடுத்து வழங்கினார்கள். அவர்கள் இந்த எண்களுக்கு 'இந்து' எண்கள் என்று பெயரிட்டனர். பிறகு இந்த எண்களின் வடிவங்களைப் பாரசீகரிட மிருந்து அராபியர் எடுத்துக் கொண்டு வழங்கினார்கள். அராபியர் இந்த எண்களுக்குப் “பாரசீக எண்கள் என்று பெயரிட்டனர். பிறகு அராபியரிடமிருந்துஇந்த எண்களை ஐரோப்பயிர் எடுத்துக் கொண்டு வழங்கிய போது இதற்கு “அரபி” எண்கள் என்று பெயரிட்டார்கள்.

2.

Leonardo Fibonacci.

3. இந்தக் கூட்டல் கழித்தல் குறிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் முதன் முலாக வழங்கப்பட்டன. வர்த்தகர்கள் தாங்கள் அனுப்பும் சரக்கு மூட்டைகளின் மேல் இந்தக் குறிகளையிட்டார்கள். + இந்தக் குறி, மூட்டையில் சரக்குகள் அதிகமாக இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கவும், - இந்தக் குறி, மூட்டையில் சரக்குகள் குறைவாக உள்ளன என்பதைத் தெரிவிக்கவும் சரக்கு மூட்டைகளின் மேல் வியாபாரிகளால் குறிக்கப்பட்டன. பிறகு, கணித நூலிலே கூட்டல், கழித்தல் குறியாகக் கொள்ளப்பட்டன. (சீனி. வே.)

4. பாச்சியம் = வகுக்கப்படும் எண்.

5. பாசகம் = வகுக்கும் எண்

6. Manual of the Administration of the Madras Presidency. Vol II. 1885.