உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

63

திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய ஊர்களில் இருந்த மடங்கள் சென்ற 19-ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தது மட்டு மல்லாமல், மாணவர்களுக்குக் கல்வி புகட்டி வந்தன.

குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும், பெருநிலக்கிழார் களும், ஜமின்தார்களும், பிரபுக்களும் அக்காலத்தில் தமிழ்ப் புலவர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கள் மாளிகைகளில் தகுந்த புலவர்களை அமைத்துப் போற்றினார்கள். அப்படிச் செய்வதைத் தமது தகுதிக்குப் பெருமையாகக் கருதினார்கள். அன்றியும் அவர்கள் நூல் நிலையங்களையும் தங்கள் மாளிகைகளில் அமைத்திருந்தனார்.

புலவர்கள் அவதானம் செய்யும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. அஷ்டாவதானம், கோடசாவதானம், சதாவதானம் முதலிய அவதானங்கள் செய்யப்பட்டன. அவதானம் செய்வது அதிக நினைவாற்றல் உள்ளவர்களால்தான் இயலும். நினைவாற்றலினாலே ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்வது அவதானம் எனப்படும். விறலிவிடு தூது (அஷ்டாவதானி சரித்திரம்) என்னும் நூலில் அஷ்டாவனி எவ்வாறு அவதானம் செய்தார் என்பது கூறப்படுகிறது. 'வால சரஸ்வதியென் வாக்கிற் ப்ரசன்னமதாய்

66

நாலு கவித்திறமும் நானறிந்து - வேலும்

மயிலுமெனச் சொன்னவுரை மாறாமற் சொல்லக் கயிலாட சிங்கி கழற்ற - அயலொருவன்

சொன்ன வினாச் சொல்ல வெதிர்சூதாடப் பின்முதுகு தன்னி லெறிந்த கல்லுதா னெண்ணப் - பன்னுசது ரங்க விளையாட்டுக் கடிபார்க்கச் சொற்புலவோர் தங்கள் கவியை யவதானிக்கச் - சங்கத்தில்

எட்டெட் டெழுத்தாணிக் கேற்றகவி சொல்லவும்யான் அட்டவா தானி யென்ப தாயினேன்.

وو

இன்னொரு புலவர் அட்டாவதானம் செய்வதை.

66

"மாறாமல் வாய்வேலு மயிலுமென வேசொல்ல வாசகங் கைகள் எழுத

வருகணக் கொருபுறம் தீரமற் றொருபுறம்