உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

69

1922-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் பாளையங்கோட் டையிலும் நாகர் கோயிலிலும் துண்டுப் பிரசுரசங்கங்கள் அமைக்கப்பட்டன. இவ்விரண்டு சங்கங்களும் இணைந்து வேலை செய்தன. இவற்றிற்கு "நாகர்கோவில் சமயத் துண்டுப் பிரசுர சங்கம்”4 என்பது பெயர்.

1830-ஆம் ஆண்டு நெய்யூரில் துண்டுப் பிரசுர சங்கம் நிறுவப்பட்டது. 1844-இல் நாகர் கோயில் சங்கமும் பாளையங் கோட்டை சங்கமும் நட்புமுறையில் பிரிந்து தனித்தனியே துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டன. பின்னர், 1855-ஆம் ஆண்டு செய்யூர் சங்கமும் நாகர்கோவில் சங்கமும் ஒன்றாக இணைந்து, தென் திருவாங்கூர் துண்டுப் பிரசுரசங்கம்' என்னும் பெயருடன் செயலாற்றத் தொடங்கித் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டன.

6

மதுரையிலிருந்த அமெரிக்கன் மிஷன், தஞ்சாவூர் துண்டுப் பிரசுரசங்கம் தரங்கம்பாடி மிஷன் ஆகிய சங்கங்களும் துண்டுப் பிரசரங்களை அச்சிட்டு வழங்கின.

இந்தச் சங்கங்கள் வெளியிட்ட ஏராளமான துண்டுப் பிரசுரங் களின் பட்டியலைக் கூறினால் அது மிக நீண்ட பட்டியலாகும். படிக்கும் பழக்கத்தை உண்டாக்கவும், புத்தகங்களை வாங்கிப்படிக்க இயலாதவர்களுக்கு உதவியாகவும் இருந்தன இந்தப் பிரசுரங்கள்.

சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது மல்லாமல் திங்கள் இதழ்கள். வார இதழ்கள், செய்தித்தாள்கள் முதலியவற்றை, முதன் முதலாக வெளியிட்டவர் களும் கிறிஸ்துவர்களே. கிறிஸ்துவர்களின் வெளியீடுகளைக் கண்ட இந்துக்களும் பிறகு வார இதழ், திங்கள் இதழ்களை வெளியிடத் தொடங்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த திங்கள் இதழ் வார இதழ்களின் பட்டியலை வேறு இடத்தில் காண்க. பத்திரிகை வெளியீடுகளைச் சென்ற நூற்றாண்டில் முதல் முதலாகத் தமிழில் வெளியிட்டவர்கள் கிறிஸ்துவர்கள்.

கிறிஸ்துவர் பைபிள் என்னும் விவிலிய நூலையும் கிறிஸ்துமதச் சார்பான வேறு பல நூல்களையும் வசனமாக எழுதி அச்சிட்டார்கள். தமிழ் வசன நடை வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டியவர் கிறிஸ்துவர்களே. தமிழில் மட்டுமல்ல, ஏனைய இந்திய மொழிகளிலே வசன நடையைப்