உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இந்தத் தவறான கருத்தைப் பரப்பியவர் 18-ஆம் நூற்றாண்டி லிருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் ஆவர். மிக அரிதாகச் சங்க நூல்களைப் பயின்றுவந்த சிறுபான்மைப் புலவரையும் அவற்றைப் படிக்காமல் தடுத்தவர் இலக்கணக் கொத்து நூலாசிரி யராகிய சுவாமிநாத தேசிகர். மிகுந்த சைவப் பற்றுடைய தேசிகர், சங்க நூல்களையும் சமண பௌத்த வைணவ இலக்கியங்களையும் படிக்கக் கூடாதென்றும் சைவ நூல்களை மட்டுந்தான் படிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி எழுதினார். அந்நூல்களைப் படிப்போரை இகழ்ந்து உரைத்தார். அவர் இயற்றிய இலக்கணக் கொத்து என்னும் நூலின் பாயிரத்தில். 7-ஆம் சூத்திரத்தின் விளக்கத்தில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

ம்

"மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம். அன்றியும், அழகிய சிற்றம்பல முடையான் (சிவபெருமான்) அவர் (மாணிக்கவாசகர்) வாக்கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்கு வேண்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோ டொன்றாக்குவர்.... அம்மட்டோ! இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங் களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டணத்துப் பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒர் பொருளாக எண்ணாது நன்னூல், அகப்பொருள் காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு. இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஒர் பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். அவர் இவைகளிருக்கவே அவைகளை விரும்புத லென்னெனின், பாற்கடலுட் பிறந்து அதனுள்ளே வாழு மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை என்க.'

99

இஃது இவருடைய கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. சைவர் சைவசமய நூல்களைத்தான் படிக்க வேண்டும். சமயச் சார்பற்ற சங்க நூல்களையும், சமணர், பௌத்தர், வைணவர் முதலியவர் இயற்றிய இலக்கிய நூல்களையும் படிப்பது கூடாது. அந்நூல்களைக் கற்பது வாழ்நாளை வீணாளாகக் கழிப்பதாகும் என்பது இவருடைய