உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நூல்களையும்

மேகலை சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய மாணவர்களுக்குப் பாடஞ் சொல்வதை நிறுத்திக் கொண்டன.

குறுகிய நோக்கத்துடன் சைவ சமயக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்குச் சிறந்தாகத் தோன்றுகின்ற இந்தக் கருத்து, பரந்து விரிந்த நோக்கத்துடன் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் என்னும் கண்கொண்டு பார்க்கும் போது எவ்வளவு ஆபத்தானது என்பது நன்குதெரியும். தமிழரின் பண்டை நாகரிகம், கலை, பண்பாடுகளை அடியோடு அழித்து ஒழிப்பதற்கு அடிப்படையாக இருந்தது இந்தக் கொள்கை. இந்தக் கொள்கை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நிலைத்திருந்தது 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இயக்கம் நாலைந்து தலை முறைவரையில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுவரையில் நீடித்திருந்தது. இந்தக் குறுகிய தவறான கொள்கையின் காரணமாகவே சில பழந்தமிழ் நூல்கள் மறைந்து விட்டன. மிக அருமையாகச் சிலரிடத்தில் மட்டும் இருந்த ஏட்டுச் சுவடி .கள், இந்த இயக்கம் காரணமாக மறைந்துவிட்டன. சிதலாமான ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதிவைக்காத காரணத்தினால் அவை முழுவதும் அழிந்துவிட்டன. வளையாபதி, தகடூர் யாத்திரை என்னும் நூல்கள் இந்தக் குறுகிய கொள்கை காரணமாக அழிந்துபோன நூல்களாகும்.

19-ஆம் நூற்றாண்டிலே தமிழுலகத்திலே தலைசிறந்த ஆசிரியர் என்று உலகப் புகழ்ப்பெற்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்தின் வித்துவானாக இருந்தார். இவரிடம் பாடம் கேட்டு வித்துவானானவர்கள் பலர். அவர்களுள் உ. வே (பிறகு, டாக்டர்) சாமிநாதையர் அவர் களும் ஒருவர். மாகவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தம் மாணவர்களுக்குச் சங்க இலக்கியங்களையும் மனிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் பாடம் சொல்லவில்லை. ஏனென்றால், அந்த நூல்களைப் படிக்கக்கூடாது என்ற கொள்கை அக்காலத்துச் சைவ மடங்களிலும் புலவர்களிடத்திலும் பரவியிருந்தது. வேறு சைவ வைணப் புலவர்களும் சங்க நூல்களை அக் காலத்தில் பாடஞ் சொல்லவில்லை. சங்க இலக்கியங்களைப் பிற்காலத்தில் அச்சிற் பதிப்பித்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கும் அக்காலத்தில் சங்கநூல்களின் பெயர் கூடத் தெரியாதிருந்தது