உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

87

பாட்டியல், ஊசிமுறி முதலில் நூல்கள் இக்காலத்தில் மறைந்துபோன நூல்களைச் சேர்ந்தவை.

புலவர் பரம்பரையில் வந்தவர்கள் எல்லோரும் புலவர் அல்லர். அந்தப் பரம்பரையில் கல்வியருமையறியாத பதர்களும் இருந்தனர். இவர்கள் நூல்களின் பெருமையறியாமலும், பழுதான அருமை நூல்களைப் பிரதி எழுதி வைக்காமலும் இருந்தனர். அன்றியும் பதினெட்டாம் பெருக்கில் தம் வீட்டு ஏடுகளைக் கொண்டு போய் வெள்ளத்தில் போடுகிற வழக்கமும் இவர்களிடம் இருந்தது. சிதைந்துபோன ஏட்டுச் சுவடிகளை, அவற்றின் அருமை தெரியாமல், அடுப்பில் போட்டு நெருப்பில் இட்டுக் கொளுத்தியவர்களும் உண்டு. இவ்வாறு அழிந்து போன நூல்கள் பல. அக்காலத்தில் அச்சியந்திரம் இருந்து பழைய நூல்கள் அச்சிடப்பட்டிருந்தால் பல நூல்கள் அழிந்திராமல் உயிர் பெற்றிருக்கும்.

அச்சுப் புத்தகம் உள்ள இந்தக் காலத்தில் புத்தகத்தின் அருமை பெருமை தெரிவதில்லை, காசு கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையினால். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பது நம்மவரில் பலருக்குத் தெரியாது. பெர்ஸிவல் ஐயர் என்னும் மேல் நாட்டவர் நமது நாட்டுக்கு வந்து 1835-ஆம் ஆண்டுக்கு முன்பு வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியின் ஓலைச் சுவடிப் பிரதியை விலைக்கு வாங்கியபோது பத்துப்பவுன் (ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்) கொடுத்து வாங்கியதாகவும், அதே சதுரகராதி அச்சுப்புத்தகமாக வெளிவந்தபோது அது 21/2 ஷில்லிங்குக்கு (ஏறக்குறைய 1 ரூபா 14 அணா) விற்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து ஏட்டுச் சுவடிக்கும் அச்சுப்புத்தகத்துக்கும் விலையில் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

சமயக்

ஏட்டுச் சுவடிகளைப் பெறுவது கடினமானதும் அதிகப் பொருட் செலவுள்ளதுமாக இருந்தபடியினாலே, ஜைனர்கள் (சமண சமயத்தவர்) 'சாஸ்திரதானம்' என்னும் ஒரு முறையைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். சாஸ்திரதானம் என்பது, செல்வம் படைத்த ஜைன சமயப் பிரபுக்கள் தமது இல்லங்களில் நிகழ்கிற திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில், ஜைன சமய நூல்களில் சிலவற்றைப் பல படிகள் எழுதுவித்து, அவற்றைத் தகுந்தவர்களுக்குத்