உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

எழுதா எழுத்து

97

அச்சு எழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார்கள் அக் காலத்துப் புலவர்கள். இது பற்றி இந்நூல் 94, 95-ஆம் பக்கங்களில் கூறியுள்ளேன்.

சென்ற நூற்றாண்டிலே ஸ்ரீ தயாநிதி அச்சுக்கூடத்தில் அவிநாசிப் புராணத்தை அச்சிட்டபோது அதற்குச் சிறப்புப் பாயிரம் அளித்த கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் கும்பகோணம் சபாபதி பிள்ளையவர்கள் அச்செழுத்தை எழுதா எழுத்து என்று கூறினார்.

66

'மானுடப் பிறவி தானடைந் ததற்குப்

புனைபய னிதுவென் மனமதி னினைவுறீஇ வழுவி லதனை யெழுதா வெழுத்தில் இட்டெவ்வுலகும் எட்ட விரித்தனன்'

என்பது அச்சிறப்புப் பாயிரத்தின் பகுதி.

99

எழுதா எழுத்து என்பது ஊராக் குதிரை, துவ்வா நறவு, நூலாக் கலிங்கம், மிதியாச் செருப்பு, வாடா வஞ்சி என்பன போல அமைந்திருப்பது காண்க.

பதிப்பாசிரியர்கள்

ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்களை முதல் முதலாக அச்சிற் பதிப்பித்தவர்களின் பெயர்கள் இப்போது மறக்கப் பட்டுள்ளன. மறக்கப்பட்ட அவர்களின் பெயரை, நான் அறிந்த வரையில் குறிப்பிடுகிறேன். சென்னைக் கல்விச் சங்கத்தின் வாரியஸ்த ராக இருந்த முத்துசாமிப் பிள்ளை (? – 1840), புதுவை நயனப்ப முதலியார் (1779-1845), சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த தாண்டவராய முதலியார் (? -1850), இயற்றமிழாசிரியர் முகவை இராமாநுசக் கவிராயர் (?-1852), களத்தூர் வேதகிரி முதலியார், வீர சைவராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், கோட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர், தில்லை யம்பூர் சந்திரசேகரக் கவிராசபண்டிதர், மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளை, இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை முதலியோர். உ.வே. (பின்னர் டாக்டர்) சாமிநாதையர் சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஏட்டுச் சுவடிகளை அச்சிடத் தொடங்கினார்.