உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

எடுக்கத்தகுவது மெடுக்கத்தகாதது முண்டு; வினாவறிந்து நடக்கவேணு மென்றார். அதுக் கவர்க ளம்மாத்திரத்துக்கு நாங்கள் மனுஷரல்ல வென், றெடுக்க வேண்டியதைமாத்திரம் வேறுபட வெழுதச் சொன்னார்க ளவரெழுதினார்."

"அப்புறம் போகையில் வழுக்கு நிலத்திலீரமாகக்கொள்ளத் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக்காற் குதிரை தவறி விழுந்ததாம். அந்தண்டையிலிருந்த குழியிற் குருவுந் தலை கீழுங் கால் மேலுமாக விழுந்து கோவென்றலறி யென்னை யெடுக்க வோடி வாருங்கோளென்று கூப்பிட்டார். சீஷரு மோடிவந்து முன்னெழுதித் தந்த வோலையை யெடுத்தொருவன் வாசிக்க விழுந்த தலைப்பா கெடுக்கவும் விழுந்த சோமன் வேஷ்டி யெடுக்கவும் விழுந்த சட்டை யுள்ளுடை யெடுக்கவு மென்றவன் வாசித்தபடி ஒன்றொன்றா யெல்லாத்தையு மெடுத்துவைக்கக் குருக்கள் நிருவாணமா யங்கே கிடந்தார்.”

66

'அவரிப்படிக்கிடந்து தம்மையு மெடுக்கச் சொல்லி யெத்தனை கெஞ்சினாலு மெத்தனை சினந்தாலும் மிதுவும் ஏற்கனவே யோலை யிலெழுதாதினாலே மாட்டோமென்று சாதித்தார்கள். ஐயா வும்மையு மெடுக்க வெழுதின தெங்கே காட்டும். எழுதினபடியே செய்வோமே யொழிய வெழுதாததை யொருக்காலுஞ் செய்யச் சம்மதியோ மென்றார்கள். அவருமிவர்கள் சாதனை கண்டு தப்பும் வழி வேறொன்றுங் காணாம லோலையு மெழுத்தாணியும் வாங்கிக் கிடந்த விடத்தில் நானும் விழுந்தா லெடுக்கக்கடவீர்களென்றெழுதினார்.”

66

எழுதினதைக் கண்டு சீஷர்களு மொருமிக்கப்போ யவரை யெடுத்தார்கள். விழுந்த குழியிற் சேறிருந்தபடியினா லவருடம் பெல்லாஞ் சகதியாயழுக்குப்பட்ட தென்று சமீபத்திலிருந்த தண்ணீரிலே குளிப்பாட்டினார்கள். பின்பு பழையபடி யுடுப்பெல்லா முடுத்தவரைக் குதிரையிலேற்றி மடத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள்.”

1. Constantine Joseph Beschi

அடிக்குறிப்பு