உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

"

இவற்றைக்கொண்டு மேற்படி ஆண்டிலேயே தமிழிற் சில புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். செர்மனியிலிருந்து வந்த அச்செழுத்துக்கள் பெரியவையாயிருந்த படியாலும், அவற்றால் அச்சிடும்போது காகிதத்தில் அவை மிகுந்த இடத்தைக் கவர்ந்து கொண்டபடியாலும், அக்காலத்தில் அச்சிடுவதற்குக் காகிதங் கிடைப்பது அருமையாயிருந்தபடியாலும், காகிதச் சிக்கனத்தை முன்னிட்டு, தரங்கம்பாடியில் சிறிய அச்செழுத்துக்களை உண்டாக்கினார். ஐரோப்பாவிலிருந்து போதிய அளவு காகிதம் அச்சிடு வதற்கு அனுப்பப்படாமையால், தரங்கம்பாடியிலேயே காகிதப் பட்டறை யொன்றை நிறுவிக் காகிதம் செய்ய முயன்றார். இந்தக் காகிதப் பட்டறையில் செலவுக்குத் தக்கபடி பலன் கிடைக்காதபடியால், சிறிது காலத்துக்குப் பிறகு அது மூடப்பட்டது.

1713-ஆம் ஆண்டு முதல் தரங்கம்பாடியில் ஸீகன்பால்கு ஐயரால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் பொதுமக்களுக்குக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட படியால், அவைகளை மக்கள் ஆவலுடன் வாங்கி ஆசையோடு படிக்கத் தொடங்கினார்கள். மக்கள் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திற்குச் சென்று அச்சுப்பொறியைக் கண்டு வியந்ததோடு, ஓலைச் சுவடிகளைவிடப் பல வழிகளிலுஞ் சிறப்புடைய அச்சுப்புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிற் பொதுமக்களுக்கு முதன் முதல் அச்சுப்புத்தகம் வழங்கிய பெரியார் ஸீகன்பால்கு ஐயரே ஆவர். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் ஸீகன்பால்கு ஐயர் செய்த தொண்டு இஃது ஒன்று தான். தமிழ்நாட்டில் தோட்டிமுதல் தொண்டைமான் வரையில் எல்லோரும் அச்சுப்புத்தகத்தைக் கையாளும்படி செய்தவர் என்கிற முறையில் இவர் பெயர் என்றும் மறக்கற்பாலதன்று.

இவருக்கு முன்னமே, 1577-ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலும், மலையாளதேசத்தில் தமிழ்ப்புத்த கங்கள் அச்சிடப்பட்டன என்பது உண்மையே. ஏசுவின் சபைப் பாதிரிமார்களால் அச்சிடப்பட்ட அப்புத்தகங்கள் பாதிரிமார், மதபோதகர்கள் இவர்களின் பழக்கத்துக்காக மட்டும் வழங்கப் பட்டனவேயன்றி, பொது மக்களுக்காக அவை அச்சிடபப்பட வில்லை;