உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

113

களும் அஞ்ஞானிகளுங் கிறித்து மார்க்கத்தைக் குறித்துப் பல விதமாய்ப் பேசிக்கொண்டு வந்தபொழுதுமல்லவோ, மத்தேயு முதலானவர்கள் தங்கள் புஸ்தகங்களை யெழுதினார்கள். ழுதுகிறபோது, அவர்கள் தங்கள் புஸ்தகங்களுக்குச் சாதுரியமான முகவுரைகளை யெழுதாமலும் அந்தந்தச் சரித்திரங்களை இணைக்கும்படிக்கு இலக்கணமான பேச்சுக்களைக் கூட்டாமலும், முன்னே நடந்தவைகளைக் குறித்தாவது, அவைகளை நடப்பித்த வர்களைக் குறித்தாவது கண்டிப்புகளைச் சொல்லாமலும் வாசிப் பவர்களுக்கு விசனமும் கலக்கமு முண்டாக்கத்தக்கவைகளைக் குறித்துப் போக்குகளைச் சொல்லாமலுஞ் சந்தேகமுள்ள காரியத்தை நிச்சயமாக்கும்படிக்குத் தந்திரமான தருக்கங்களைக் காட்டாமலும், இந்தக் காரியம் உலகத்தாருக்கு எப்படித் தோன்றுமோ, என்ன விரோதஞ் செய்வார்களோ, இதை நம்புவார் களோ இல்லையோ வென்று விசாரியாமலுந் தாங்கள் கண்டுங் கேட்டுமிருந்த நடக்கைகளை வித்தியாசமில்லாமல் இயல்பா யெழுதினார்கள். அவர்களிப்படி யெழுதினவகையே மிகுந்த வுண்மையைக் காட்டுகின்றது. மற்றெந்த சரித்திரப் புத்தகங்களிலேயும் அப்படிப்பட்ட அடையாளங்களைக் காணோம். அப்போஸ்தலர்கள் தாங்களே நிச்சயமாய் நம்பினதை யுலகத்திற் கறிவிக்கிறார்கள். வாசிக்கிறவர் களுக்கு ஆச்சரிய முண்டாகும்படிக்கு அவர்கள் பிரயாசப்படாமல், நல்ல புத்தியையும் மெய்யறிவையுங் கொடுக்கும்படிக்கு மாத்திரம் பிரயாசப்பட்டுத் தங்களையும் மறந்து தாங்கள் பிரசித்தம் பண்ணும் படிபெற்ற பெரிய சத்தியத்தால் நிறைந்தவர்களா யெழுதினார்கள். அதினாலே அவர்கள் தங்கள் எசமானுடைய சரித்திரத்திலே உலகத்தாருக்கு முன்பாக அவரை அற்பமாக்கத்தக்க சில விசேஷங் களை மறையாமல் அவருடைய தாயின் எளிமையையும் அவர் தரித்திரத்தோடே பிறந்ததையும், அவருடைய இனத்தார் அவரை யசட்டை பண்ணினதையும் அவர் எளியவராக நடந்து வந்ததையும், அவருடைய சீஷர்கள் கல்வியில்லாத தொழிலாளிகளாயிருந் ததையும், யூதர்களுடைய அதிகாரிகள் வேதபாரகர் முதலான பெரியோர்கள் அவரை நிந்தித்து எப்பொழுதும் விரோதித்ததையும், அவருடைய சீஷர்களில் சிலர் அவரை விட்டுப்போனதையும், பிரதான சீஷர்களிலொருவன் அவரைப் பகைஞருக்குக் காட்டிக்