உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தமிழ்ப்புலமைவாய்ந்த நம் நாட்டுக் கிறித்துவர்

தமிழ்மொழிக்கு ஐரோப்பியர் செய்த தொண்டுகளை மட்டும் ஆராய்வதே இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கமாகும். னால், இந்நூலுக்கு “ஐரோப்பியருந் தமிழும்” என்று பெயர் சூட்டாமல், "கிறித்துவமும் தமிழும்" எனப் பொதுப்படப் பெயர் அமைக்கப் பட்டதனால், நம் நாட்டுக் கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டுகளைப் பற்றியும் இங்குக் கூறவேண்டுவது முறையே. அங்ஙனம் தமிழ்க் கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டுகளை எழுதப்புகுந்தால், அன்னவர் மிகப் பலராதலின், இந்நூல் பன்மடங்கு பெருகும் என்பதையுணர்ந்து, அவர்களுள் ஒரு சிலரைப்பற்றிய குறிப்புகளை மட்டும் இங்குச் சுருக்கமாக எழுதுகிறோம்.

அந்தோனிக் குட்டி அண்ணாவியார்:- திருநெல்வேலிச் சில்லா மணப்பாறையிற் பிறந்தவர். பேர்பெற்ற வீரமாமுனிவரின் காலத் திலிருந்தவர். சிறந்த தமிழ்ப் புலவர். இவர் இயேசுநாதர்மீது பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் அனைத்தும்

ஒன்றுதிரட்டி யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

அரிகிருஷ்ண பிள்ளை :- (1827 - 1900) கரையிருப்பு என்னும் ஊரிற் பிறந்தவர். மகாவித்துவான் இராமநுச கவிராயரிடம் கல்வி கற்றவர். சாயர் கல்விச் சாலையிலும், சர்ச்மிஷன் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தார். சிறந்த கல்விமான். இவர் இயற்றியது “இரட்சணிய யாத்திரிகம் என்னும் காவியநூல்.

وو

இன்ப கவி :- திருநெல்வேலியில் உள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். எட்டயபுரம் சமஸ்தானத்திலும், தஞ்சை சரபோசி ராசா சமஸ்தானத்திலும் நன்கு மதிக்கப்பட்டவர். கவிகளை இனிமையாகப்பாடும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் அவ்வப்போது இயற்றிய தனிச்செய்யுள்கள் பல. யாழ்ப்பாணத்தில் கச்சேரி