உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

129

1864-இல் நியமிக்கப்பட்டார். 1886-இல் சீவக சிந்தாமணியின் சில பகுதிகளை அச்சிட்டு வெளியனுப்பினார்.

வேத அகராதி (1841) நியாயப் பிரமாண விளக்கம் (1847) விசுவாசப் பிரமாண விளக்கம், இந்து மதத்துக்கும் பாப்பு மதத்துக்கும் இருக்கிற சம்பந்த விளக்கம் தர்ம சாஸ்திரசாரம் முதலிய நூல்களை எழுதியிருக்கிறார்.

சற்குணம் உவின்பிரேட் ஐயர்:(1810-1879)- திருநெல் வேலியைச் சேர்ந்த வாழையடி முதலூர் என்னும் நாசரேத்தூரிற் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், லத்தீன், கிரீக்கு, எபிரேபிய மொழி களைக் கற்றவர். ‘பனியன்ஸ் ஹோலிவார்’4 என்னும் ஆங்கில நூலைத் “திருப்போராடல் என்னும் பெயருடன் தமிழில் மொழி பெயர்த்தார். "தாவீதரசன் அம்மானை,” “உதிர மகத்துவம்,” “இரத்தினாவலி நாடகக் கதை மகத்துவம்,""இரத்தினாவலி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கிறார்.

இவர் முதலில்

சாமுவேல் பவுல் ஐயர்:(1844-1900) உபாத்தியாயராகவும், பின்னர் உபதேசியராகவும். கடைசியிற் குருவாகவும் விளங்கினார். 1890 முதல் "நற்போதகம்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். 1898-இல் இவருக்கு "ராவ்சாகிப்” என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. “பரதேசியின் மோட்சப்பிரயாணம்” முதலிய பல நூல்களை மொழி பெயர்த்திருக்கிறார்.

சிதம்பரம் பிள்ளை:- இவரது ஊர் யாழ்ப்பாணத்துச் சங்குவேலி. தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். உபாத்திமைத்தொழில் புரிந்துவந்தார். ஆங்கில தர்க்க விதிகளைத் தமிழிற் பாட்டும் உரையுமாக மொழிபெயர்த்து, “நியாய இலக்கணம்" என்னும் பெயருடன் வெளியிட்டிருக்கிறார். இதுவன்றி, "தமிழ் வியாகரணம்," "இலக்கிய சங்கிரகம்” என்னும் நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தி யிருக்கிறார்.

நயனப்ப முதலியார்:(1779-1845)- இவரூர் ரூர் புதுச்சேரி.

5

இளமையிலேயே தமிழை நன்கு கற்றுத் தேர்ந்து விளங்கினார். இவர் தமது 18-ஆவது வயதில் "சென்னைத் தமிழ்ச் சங்கத்தில்" 5 தமிழாசிரியராயமர்ந்தார். சிற்றம்பலக்கோவை, தஞ்சைவாணன் கோவை, ஒருதுறைக்கோவை, நாலடியார், திவாகரம், சூடாமணி