உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

131

துரையவர்கள் எழுதிய தரவு கொச்சகக் கலிப்பாக்களின் கடைசியில் ‘நமச்சிவாய' என்னும் சொல் அமைந்திருப்பதைக் கண்டு எல்லிஸ் துரையவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்துவிட்டார் என்று சிலர் சொல்லியதை மறுத்து, இவர் மேற்படி பாக்களுக்கு உரை எழுதி, “நமச்சிவாய” என்னும் பதத்திற்குப் பொருள் “கடவுளுக்கு வணக்கம்” என்பதன்றி வேறில்லை என்று நிலைநாட்டினார். இவர் 1840-ஆம் ஆண்டு காலமானார்.

وو

வித்துவான் சாமிநாத பிள்ளை:- இவர் புதுச்சேரியிற் பிறந்தவர். சிறுவயதிலேயே தமிழ் கற்றுத் தேர்ந்தவர். வாலிப வயதில் “நசரைக் கலம்பகம், "சாமிநாதன் பிள்ளைத் தமிழ்” என்னும் நூல்களை இயற்றினார். இவர் சென்னைக்குச் சென்று அங்கு வாழ்ந்திருந்த போது எல்லிஸ் துரைக்குத் தமிழாசிரியராக அமர்ந்தார். இவர் இயற்றிய ஞானாதிக்கராயர் காப்பியம்” இவரின் நூல்களிற் சிறந்தது.

66

வேதநாயகம் பிள்ளை:- இவரது ஊர் திரிசிரபுரத்துக்கு அண்மையிலுள்ள குளத்தூர். சீகாழி, மாயவரம் முதலிய இடங்களில் நீதிபதி உத்தியோகம் செய்தவர். தமிழில் தேர்ந்த புலவர். வசனம், செய்யுள் என்னும் இரண்டிலும் நூல் இயற்றும் திறமை வாய்ந்தவர். 1889-ஆம் ஆண்டு காலமானார். இவரியற்றிய நூல்கள்: “சர்வசமய சமரசக் கீர்த்தனை," "நீதிநூல்," "பெண்மதி மாலை, “பிரதாப முதலியார் சரித்திரம்,” “சுகுணசுந்தரி சரித்திரம்" முதலியன.

وو

வேதநாயக சாஸ்திரி:- 1773-ஆம் ஆண்டு பிறந்தார். தஞ்சா வூரில் வாழ்ந்தவர். தமிழ்க்கவி பாடுவதிற் சிறந்தவர். "பேரின்பக் காதல், “இயேசுவின் பேரில் பதங்கள், "ஜெபமாலை" "பெத்லேகம் குறவஞ்சி,” ஞானவுலா முதலான பல நூல்களை இயற்றியிருக்கிறார்.

இ. சாமுவேல் பிள்ளை:- இவர் தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலை 1858-ஆம் ஆண்டு எழுதி அச்சிட்டார். இந்நூலில், தொல்காப்பியமும் நன்னூலும் தம்முள் ஒற்றுமை வேற்றுமைகள் விளங்க ஒருபான்மை உதாரணமாய்ச் சூத்திர சம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன. இஃது ஓர் அருமையான நூல். புதுவைத் தமிழ்ப் புலவர் பொன்னுசாமி முதலியாரவர்கள், தரங்காபுரம் சண்முகக் கவிராயரவர்கள், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் அவர்கள் முதலியவர்கள் இதற்கு எழுதிய சிறப்புப் பாயிரப்