உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

135

யுடையனவாம். ஆண்டு=அவ்வாறு வழங்குமிடத்து, ஏகார மோகார மெய்=ஏகார ஓகாரங்களுந் தனி மெய்களும், புள்ளியெய்தும்=பழைய புள்ளியைப் பெறும் (எ-று.)

இவ்வாறு கூறுதலாற் பிற்காலத்தார் அந்தப் புள்ளியை நீக்கிச் சந்தேகப்பட வழங்கி வந்தன ரென்பதாயிற்று. வரலாறு: எ எ, ஒ ஒ, கெ கே, கொ கோ, க்க ங்ங என வரும், மற்ற உயிர் மெய்களும் தனி மெய்களும் இவ்வாறே புள்ளிபெறுமெனக் காண்க.தொல்லாசிரியர் முதலாயினோர்,

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே'

எனவும்,

“இறந்தது விலக்கல் எதிரது போற்றல்'

எனவுங் கூறினமையால், எகர மொகர மெய் புள்ளிபெறும் என்ற இச் சூத்திரத்தை ஏகார மோகார மெய் புள்ளி பெறும் எனத் திருப்ப வேண்டிற்று என்னெனின், இக் காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளியிட்டெழுதுவது பெரு வழக்காயினமையா லென்க.”

க்

இந்தக் காண்டிகையுரையை இராமாநுச கவிராயர் 1847-ஆம் ண்டு நவம்பர் மாதம் அச்சிட்டு வெளியிட்டார். அதாவது இற்றைக்கு 108 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இராமாநுச கவிராயர் அவர்கள், சில' ஆங்கிலேயர்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் என்பது

குறிப்பிடத்தக்கது.

அடிக்குறிப்பு

1. Revd. W.H. Drew, T. Clarke, J. Rodgers.