உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

33

சிறப்புப் பெறாமல் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள். ஆகையால், ஆடை, முதலிய பல பொருள்கள் இந்தியா முதலிய கீழைத் தேசங்களிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுவந்தன. இதனால் இந்த வாணிகத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த முகம்மதியர் பெருஞ் செல்வம் சம்பாதித்ததில் வியப்பொன்றுமில்லை. இவ்வாறு சில நூற்றாண்டுகள் கழிந்தன.

இந்தியச் சரக்குகளை ஐரோப்பிய நாடுகளிற் கொண்டு போய் விற்பதனால் முகம்மதியர் செல்வம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வதைக் கண்ட ஐரோப்பிய தேசத்தார், தாங்களும் நேர்முகமாக இந்தியாவுடன் வாணிகஞ் செய்து பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆவல் கொண்டார்கள். ஆனால், இந்தியாவுக்குச் செல்லும்வழி முகம்மதியர் ஆதிக்கத்திலிருந்தபடியாலும், வேறு குலத்தார் இவ்வணிகத்தைக் கைக்கொள்ளாதபடி அவர்கள் (முகம்மதியர்) வெகு கருத்தாகக் காவல் செய்திருந்தபடியாலும், ஐரோப்பியரின் எண்ணம் கைகூடவில்லை. அக்காலத்தில் பூகோள நூல் தெரியாத படியால் வேறு வழியாக இந்தியாவுக்குச் செல்லும் வழியையும் ஐரோப்பியர் அறிந்திருக்க வில்லை. இந்தியா ஐரோப்பாவுக்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கின்ற தென்பதுமட்டும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அங்குச் செல்வதற்கு வேறு வழி தெரியாமல் திகைத்தனர். அக்காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் இந்தியாவைப்பற்றிப் பல கதைகள் வழங்கிவந்தன. இந்தியா தேசம் பூலோக சுவர்க்கம் என்றும், பணம் காய்க்கும் மரங்கள் அங்கே ஏராளமாக வளர்கின்றன என்றும், தேன் ஆறும், பால் ஆறும் கரை புரண்டோடுகின்றன என்றும் பலவிதமான செய்திகள் உலவிவந்தன. இவ்விதச் செய்திகளைக் கேட்டபோது ஐரோப்பியருக்கு நாவில் நீர் சுரந்தது. தேனாறும் பாலாறும் கரை புரண்டோடும் அந்தப் பூலோக சுவர்க்கத்தை, பணம் காய்க்கும் மரங்கள் வளருகிற வியப்பான இந்தியா தேசத்தைக் காணவேண்டும் என்றும், அத்தேசத்துடன் நேர்முகமாக வணிகத் தொடர்பு பெற்றுப் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றும் ஐரோப்பியர் ஆவலோடு

விரும்பினார்கள். அக்காலத்தில் ஐரோப்பா முழுதும் இந்தியாவின் பேச்சாகவே இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எப்படிப் போவது? இந்தியாவுக்குச் செல்லும் வழியை முகம்மதியர் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, வேறு குலத்தார் அவ்வழியாகச் செல்லாதபடி, கண்ணை இமை காப்பதுபோல் காத்து வருகையில்,