உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

இலங்கை முதலிய இடங் களிலிருந்து துரத்திவிட்டு, அவர்களிருந்த டங்களைத் தாங்கள் கைப்பற்றிக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். இவர்களும் மதவெறிகொண்டு, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இந்துக் கோயில்களை இடித்தும், இந்துக்களைக் கட்டாயப்படுத்திக் கிறித்தவர்களாக்கியும், கிறித்தவர்களுக்கு மட்டும் அரசியல் அலுவல்களைக் கொடுத்தும் கொடுமை செய்தனர். முதலில் வாணிகர்களாக வந்த இவர்கள் பிறகு நாடுகளைப் பிடித்து அரசாள முற்பட்டார்கள். ஆனால், ஆங்கிலேயர் இவர்களை இந்தியாவிலும் இலங்கையிலுமிருந்து துரத்தி விட்டார்கள்.

இந்தியாவுடன் வாணிகம் செய்து செல்வந் திரட்ட விரும்பிய மற்றொரு தேசத்தார் ஆங்கிலேயராவர். இவர்களும் ஒல்லாந்தரைப் போலவே இந்தியாவுக்கு வடகிழக்குப் பாதையொன்றைக் கண்டு பிடிக்க முதலில் முயன்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக வடகிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் பயனடைய வில்லை. பிறகு 1578-ஆம் ஆண்டில், சர் பிரான்சிஸ் டிரேக்3 என்னும் ங்கிலேயர், இந்தியாவிலிருந்து போர்ச்சுகல் தேசத்திற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு பறங்கிக் கப்பலைப் பிடித்துக் கொள்ளை யடித்தார். கொள்ளையிடுகையில், ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு இந்தியாவுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிடுகிற படம் ஒன்றைக் கண்டெடுத்தார். அதன்பிறகு 1594- ல் சர் ஜான் லங்காஸ்ட்14 என்னும் ஆங்கிலேயர் நன்னம்பிக்கைமுனை வழியாக சாவா வரையில் யாத்திரை செய்து திரும்பிவந்தார். பின்னர் கி.பி.1600-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி" என்னும் வர்த்தக சங்கம் நிறுவப்பட்டது. அதுமுதல் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்.

நமது தேசத்தில் வாணிகம் செய்ய வந்த இன்னொரு ஐரோப்பிய இனத்தார் டேன்ஸ்15 என்னும் டேனிஷ்காரர். இவர்கள் டென்மார்க்கு தேசத்தைச் சேர்ந்தவர் 1620-ல் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, நமது தேசத்தில் உள்ள தரங்கம்பாடி, பழவேற்காடு, சிராம்பூர் முதலிய இடங்களில் வாணிகம் செய்துவந்தனர். ஆனால், இவர்களின் வாணிகம் பலப்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தரங்கம்பாடி முதலிய இடங்களை இவர்கள் ஆங்கிலே யருக்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். இவர்களும் கிறித்தவ மதத்தைப் பரவச்செய்ய முயன்று வந்தனர்.