உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

யிருக்கிறார்; கொச்சியில் “கிறித்துவ வணக்கம்” அச்சிடப்பட்ட அதே அச்சுக்கூடத்தில் அப்புத்தகம் அச்சிடப்பட்ட அதே ஆண்டில், ஏசுவின் சபைப் பாதிரியாரான மார்க்கஸ் ஜார்ஜ்12 என்பவரால் எழுதப் பட்டு, மேற்படி சபையைச் சேர்ந்த மற்றொரு பாதிரியாரான ஆன்ரிக்ஸ்13 என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “கிறித்துவ வணக்கம்" என்னும் புத்தகத்தைத் தரங்கம்பாடியில் தாம் கண்டதாக எழுதியிருக்கிறார். இதனால் அந்த இரண்டு புத்தகங்களும் தமிழ்ப் புத்தகங்களே என்பது ஐயமற விளங்கும்.

“கிறித்துவ வணக்கம்” என்னும் அச்சுப் புத்தகம் தமிழில் எழுதப்பட்டது தான் என்பதற்கு இன்னொரு சான்றும் உண்டு. டாக்டர் பி.ஜே. தோமஸ் எம்.ஏ.,என்பவர் “கேரளத்திலே கிறித்தீய சாகித்தியம்” என்னும் புத்தகத்தை மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அவர் அப் புத்தகத்தில் “கிறித்துவ வணக்கம் என்னும் புத்தகத்தைப் பற்றி எழுதியிருப்பது:- "பாரிஸ் நகரத்தில் பேர் பெற்ற ஸோர்போன்4 சர்வ கலாசாலையைச் சேர்ந்த புத்தக சாலையில் கி.பி.1579-இல், மலையாள தேசத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட ஒரு வேதோபதேச புத்தகம் இருப்பதாக அறிந்தேன். உடனே, அப்புத்தகத்தின் ஒன்றிரண்டு பக்கங்களைப் போட்டோப் பிடித்து அனுப்பும்படி பாதர் ஹோஸ்ற்றன் என்பவர் மூலமாக ஏற்பாடு செய்தேன். அப்படம் வந்து சேர்ந்ததும் அதைப் பார்த்தபோது, அப்புத்தகம் தமிழ் எழுத்துக்களால் அச்சிடப்பட்டதென்று அறிந்தேன். சேர மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உபயோகப்படும் பொருட்டு அச்சடிக்கப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது கொண்டு, அக்காலத்தில் இங்கு (மலையாள தேசத்தில்) தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கப்பட்டிருந்தது என்று தெரிகிறது” என்பது. இதிலிருந்து 1579-இல் மலையாள தேசத்தில் அச்சிடப்பட்ட “கிறித்துவ வணக்கம்" என்னும் புத்தகம் தமிழில் அச்சிடப்பட்ட தென்பதும், அதன் படி பாரிஸ் நகரத்தில் இருக்கிற தென்பதும், விளங்குகிறது, யாம் அறிந்த வரையில், பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1550 முதல் 1600 வரையில்) அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள் “கிறித்துவ வேதோப தேசம்,” “கிறித்துவ வணக்கம்” என்னும் இரண்டு நூல்கள்தாம். வேறு சில தமிழ்ப் புத்தகங்களும் அச்சிடப்பட்டிருக்கலாம், ஆனால் அவற்றின் விவரம் தெரிய வில்லை.