உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

பதிவு செய்துள்ளார். ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர். சீகன்பால்கு, எல்லீஸ், இரேனியஸ், போப், கால்டுவெல், பெர்சிவல், டெய்லர், கிளார்க், இராட்லர், வின்சுலோ, துரு ஆகிய ஐரோப்பியர்கள் தமிழுக்குச் செய்த பணி குறித்த விவரங்களை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

காலனியத்தின் மூலம் உருவான புதிய தன்மைகள் நமது பண்பாட்டில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தன. அதில் முதன்மையானது அச்சுப் பண்பாடே என்று சொல்லலாம். இவ்வகையான அச்சுப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் கிறித்துவ பாதிரியார்கள் என்றால் மிகையில்லை. இவ்வரலாற்றை இந்நூல் சிறப்பாகவே பதிவு செய்துள்ளது என்று கூறலாம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை 96

ஏப்ரல் 2010

-

தங்கள்

வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர்

தமிழ் இலக்கியத்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்