உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

என்று உறுதியாகச்

சொல்லலாம்.

/61

ஆனால், இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், கொளும்பிலும் கலாசாலைகள் அமைத்து, கிரீக்கு, லத்தீன், ஒல்லாந்த பாஷை, தமிழ் முதலிய மொழிகளைக் கற்பித்து வந்தார்களென்பதும், ஒரு அச்சுப் பொறியும் நிறுவினார்கள் என்பதும் தெரிகின்றன. யாழ்ப்பாணத்துத் தமிழராகிய மெல்லோ பாதிரியார்18 ஒல்லாந்தருடைய கல்லூரியிற் கல்வி கற்றுத் தேர்ந்தவர்களில் ஒருவர். இந்த மெல்லோ பாதிரியார் எபிரேயு, கிரீக், இலத்தீன், போர்த்துகீசியம், ஒல்லாந்து, தமிழ் என்னும் ஆறு மொழிகளில் வல்லவர். இவர் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு (விவிலிய வேதம்) 1749-ல் ஒல்லாந்தருடைய அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. இலங்கையில் ஒல்லாந்தர் காலத்தில் அச்சிடப்பட்ட வேறு தமிழ் நூல்களின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால், மேலே சொல்லியபடி ஒல்லாந்தர் இந்தியாவிலிருந்து பறங்கியரைத் துரத்திவிட்ட பிறகு, கத்தோலிக்கக் கிறித்தவர் புத்தகங்களை அச்சிடுவது நின்று விட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைக்கடுத்த தரங்கம்பாடியிலிருந்த டேனிஷ் மிஷனரியான ஸீகன்பால்கு ஐயர், தமிழ்நாட்டில் அச்சுப் பொறி இல்லாத குறையைப்பற்றிச் செர்மனி தேசத்திலுள்ள தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், அக் காலத்தில் தமிழ்நாட்டில் அச்சுப்பொறி ஒன்றேனும் இருந்திருக்க வில்லை என்பது தெளிவாகிறது. ஸீகன்பால்கு ஐயர் எழுதிய கடிதத்தில், தமக்கு வேண்டிய தமிழ்ப் புத்தகங்களையும், பாடசாலை மாணவருக்கு வேண்டிய பாடப் புத்தகங்களையும், ஓலைச்சுவடிகளில் எழுதுவித்து வருவதனால், அதிகப்படியான காலச் செலவும், பணச் செலவும் ஆகின்றனவென்றும், அவ்விதம் பணமும் காலமும் அதிகமாகச் செலவிட்டாலும் சில படிகள் தாம் எழுதி முடிக்கப் படுகின்றனவென்றும், ஆகையால் பணச் செலவைக் குறைத்துத் துரிதமாகப் புத்தகங்களை ஏராளமாக அச்சிடுவதற்கு உதவியாகத் தமிழ் அச்செழுத்துக்களையும் அச்சுப் பொறியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தமது செர்மனி தேசத்து நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார். இவரது வேண்டுகோளுக்கிணங்கி, செர்மனி யிலிருந்து அச்சுப் பொறியும், தமிழ் அச்செழுத்துக்களும் அனுப்பப் பட்டன. இவை 1713-ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தன. இது தமிழ்நாட்டில் முதன் முதல் அமைக்கப்பட்ட அச்சுப்பொறி