உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

/67

கற்பனைகளுமே பண்டைக்கால இயற்கைச் சாத்திரங்கள். இத்தகைய கற்பனைக் கதைகளைப் படித்தும் கேட்டும் பண்டைக் கால மக்கள் உண்மையுணராமல் மூடத்தனத்தில் ஆழ்ந்திருந்தனர். ஐரோப்பியரின் தொடர்பு உண்டான பிறகு, பாதிரிமார்கள் பாடசாலைகளை அமைத்து, நமது நாட்டுச் சிறுவர் சிறுமிகளுக்கு ஐரோப்பிய வழக்கத்தைப் பின்பற்றிப் பாடங்களைப் போதிக்க முற்பட்டபொழுது, எழுதல், படித்தல், கணக்குப்போடுதல் என்னும் மூன்றுடன் மட்டும் நில்லாமல், பூகோள நூல், வான நூல், இயற்கைப் பொருள் நூல், க்ஷேத்திரக் கணிதம், தேசசரித்திரம் முதலிய விஞ்ஞான நூல்களையும் கற்பிக்கத் தொடங்கினார்கள். பாடசாலைகளில் இத்தகைய விஞ்ஞான நூல்களைப் போதிக்கத் தொடங்கியபடியால், தமிழில் இந்நூல்கள் எழுதப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் பாதிரி மாரும் மிசனரிமாரும், பின்னர் அரசாங்கத்தாரும் விஞ்ஞான நூல்களைத் தமிழில் எழுதி அச்சிட்டும் பிறரை எழுதும்படி தூண்டியும் இச்செய்கையில் பேருதவி செய்திருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞான நூல்களும் சென்ற பத்தொன்பதா நூற்றாண்டிலேதான் தமிழில் எழுதப்பட்டன. இந்நூல்களின் முழுவரலாற்றினையும் கூறுவதற்குச் சான்றுகள் முற்றும் எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த சிலவற்றைக் கொண்டு ஒருவாறு கூற முற்படுகின்றோம்.

“சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம்” என்னும் இச் சங்கம் ஏற்பட்டு, பாடசாலைப் புத்தகங்களையும் வேறு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வந்தது. இச்சங்கம் 1850-முதல் அதிகச் சுறுசுறுப்பாக வேலைசெய்யத் தொடங்கிற்று. இச்சங்கம் மதச் சார்பற்ற பொதுவான சங்கம். பாடசாலைப் புத்தகங்களை அச்சிட்டு உதவியதோடு பூகோளம், சரித்திரம் முதலிய விஞ்ஞான நூல்களையும் தமிழில் எழுதி வெளிப்படுத்தியது. தமிழில் புதிய நூல்களை எழுதுவோருக்கு நன்கொடையளித்து ஊக்கப் படுத்தியது இச்சங்கம். “இந்துதேச சரித்திரம்,” “உலக சரித்திரம்,” “பல தேச சரித்திரம்,' இராபின்சன் குரூசோ" முதலான நூல்கள் நூல்கள் இச்சங்கத்தின் ஊக்கத்தினால் வெளிவந்தவை.

66

இதைத் தவிர, கிறித்துவ மதச் சார்பாக, “தென்னிந்தியக் கிறித்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம்” என்னும் சங்கம் 1854-ல்