உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

தெரிந்துவிட்டது. இவரும் பறங்கியர் தாம் என்று அவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள். அக்காலத்தில் இந்துக்கள் பறங்கியரையும் ஏனைய ஐரோப்பியரையும் இழிந்தவராகக் கருதி, அவர்களைப் பஞ்சமர் போல ஒதுக்கி வெறுத்துவந்தார்கள். தத்துவ போதக சுவாமியும் பறங்கியர்தாம் என்று தெரிந்தபோது, அவரையும் இழிந்தவராகக் கருதிப் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். மதுரையில் க்கிருந்த செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. அவருடைய போதனைகளைக் கேட்க மக்கள் அவரிடம் செல்லவில்லை. ஆகவே, அவர் அந் நகரை விட்டுப் புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, சேலம் முதலிய இடங்களுக்குச் சென்று சிற்றூர்கள்தோறும் கிறித்துவ மதபோதனை செய்து வந்தார். இவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியுடன் சமயவாதம் செய்ததாகச் சொல்லுகிறார்கள்.

இவ்வாறு இவர் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டிற் சமய போதனை செய்து வந்தார். முதுமையில் இவருக்குக் கண் பார் பார்வை குறைந்துவிட்டது. பிறகு, இலங்கைக்குச்சென்று அங்குச் சிலகாலம் தங்கியிருந்த பின்பு, மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்து, சென்னைக்கு அடுத்த மயிலாப்பூரில் உள்ள தோமையார் ஆலயத்துக்கு அருகில், ஒரு சிறு வீடு அமைத்துக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தார். கடைசியாக முதிர்ந்த வயதில், கி.பி. 1656 வருசம் பிப்ரவரி மாதம் 16- ஆம் திகதி காலமானார்.

செல்வம் படைத்த பிரபுக் குடும்பத்திற் பிறந்தும், அச் செல்வப் பயனைத் துய்த்துக்கொண்டிராமல், தாய் நாட்டைவிட்டு நெடுந்தூரத்திலிருக்குந் தமிழ்நாடு போந்து தமது வாழ்நாள் முழுவதையும் சமயவூழியஞ் செய்வதிற் கழித்துப் பல இடர்ப்பாடுற்ற இப் பெரியாரின் ஊக்கமும் மதப்பற்றும் போற்றற்பாலது.

"

இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், நூல் இயற்றுவதிலும் வல்லவர். பல தமிழ் உரைநடை நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் தமிழில் இயற்றிய நூல்கள் எல்லாம் உரைநடையே; செய்யுள் ஒன்றேனும் இல்லை. இவர் காலத்தில் தமிழ்நாட்டில் அச்சுப்பொறி இல்லாமையால் இவருடைய நூல்கள் அச்சிடப்படாமற் போனபடியாலும், நூல்களைப் போற்றுவார் இல்லாக் குறையினாலும், இவருடைய நூல்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. இவரியற்றிய நூல்களாவன :