உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 17

(தரவு)

66

"பார்மேவும் பழிநீப்பப் பகர்ந்தடங்காப் பரிவுள்ளிச் சீர்மேவுந் திருவுளத்தைத் தெரிந்தமர ருளம்பனிப்ப வுருவில்லா னுருவாக வுலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தா யாயினையே. விண்ணுலகம் புகழ்ந்தேத்த வியந்தலர்சே வடிவருட மண்ணுலகந் துயர்நீங்க மன்னுயிர்கள் சிறந்துவப்ப வான்றளங்கள் புறங்காப்ப வானரசர் பணிகேட்ப மீன்றளங்கள் அணிமதிபோல் விண்ணரசா ளாயினையே.

(தாழிசை)

தண்சுடர்கால் மதிக்குழலி தாங்கியபூ வடிவிளங்கத் தெண்சுடர்கா லுடுவரைந்த திருமுடிக்கொள் சிரமிசைப்ப பனியுயிர்த்து மனங்குளிர்க்கும் பருதியுடுத் துடலிலங்கத் தனியுயிர்த்துன் னரசணியாய்த் தரிப்பதுநின் விருதாமோ. சுனைபூத்த சோணாட்டுக் காவிரியின் வடகரைமேற் சினைபூத்த நிழற்பொழில்வாய்ச் சிங்கநெடுங் கொடிநிழற்றுந் திருக்காவ லூரகத்துத் திகழொளிவாய் மணிக்கோயில் அருட்காவ லியற்றிநமை அளிப்பதுநின் றயையாமோ.

உள்ளுருவாக் கவசமென வுத்திரகத் துடன்மருடீர் தெள்ளுருவா மணிமாலை சிறந்தேத்துங் கைநீட்டி வாய்பொய்யா மறைத்திசையாம் வடதிசையே தனிநோக்கித் தாய்பொய்யா அடைக்கலமே தருவதுநின் புகழாமோ.

கான்பொதுளும் பூம்புகையுங் கமழ்பூவு மணந்தேக்க மீன்பொதுளு மொளிமணியார் விமானத்து ளெழுந்தருளிப் பார்பூத்த வினையறநீ பறந்தநலத் திவ்வுலகுஞ் சீர்பூத்த வானொப்பச் செய்வதுநின் சிறப்பாமோ.

தாண்மலரே மலையணியத் தரும்பணிகேட் டுளம்பனிப்ப மாண்மலரே பெய்தகலுன் வரக்கடலூ டினிதாண்டு வானவருங் கரைகாணா மனந்தேற்றாப் புன்பாவா லீனவரு ளியானீந்தற் கியைந்ததுநின் றரமாமோ.