உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

"அகநாட் டண்ணல் புகவே நெருநைப் பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்று மன்னே’

117

(புறம், 249 : 7-9)

‘அகன்ற நாட்டையுடைய குரிசிலது உணவு நெரு நலை நாளாற் பகுத்த இடத்தைக் கருதிப் பலருடனே இயைந்து ஒருவழிப்பட்டது, அது கழிந்தது.' என்பது இதன் பழைய உரை.

புகா, புகவு, என்று விகாரப்பட்டு புகர்வு என்றும் வழங்கியது.

‘கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே!

மட்டப் புகர்விற் குட்டுவர் ஏறே!'

என்பது பதிற்றுப்பத்து (9-ஆம் பத்து 10 : 25-26) அடி

இதில், மட்டப் புகர்வு என்பதற்கு ‘மதுவாகிய உணவு' என்று பழைய உரையாசிரியர் உரை எழுதுகிறார்.

‘மண்புனை இஞ்சி மதில் கடந் தல்லது

உண்குவ மல்லேம் புகர்வெனக் கூறி'

என்பது பதிற்றுப்பத்துச் செய்யுளடி. (6-ஆம் பத்து 8 : 6-7) இதில் புகவு, புகர்வு என்று கூறப்பட்டிருப்பது காண்க.

பதிற்றுப்பத்து, 4-ஆம் பத்து, 5-ஆம் செய்யுளடி 'அளகுடைச் சேவல் கிளை புகர்வு ஆர' என்று கூறுகிறது. ‘பெடையொடு கூடின பருந்தின் சேவல் சுற்றத்துடன் போர்க்களத்தில் இறைச்சியாக உணவை உண்ண' என்பது இதன் பொருள். இதிலும் உணவு, புகர்வு என்று கூறப் பட்டது காண்க.

ஐங்குறு நூறு, பாலை, இடைச்சுரப்பத்து, 5-ஆம் பாட்டில், 'போகில் புகர் வுண்ணாது பிந்து புலம் படரும்' என்னும் அடியில், உணவு, புகர்வு என்று கூறப்பட்டுள்ளது.

புகர்வு என்பதும் புகவு என்பதும் புகா என்னும் சொல்லின் திரிபு. புகா என்பதே சரியான சொல். இந்தச் சொல், பிற்காலத் தமிழ் இலக் கியங்களில் வழங்கப்படவில்லையாயினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கி வருகிறது. ஆனால், இச்சொல் இப்போது குழந்தைகளின் உணவுக்கு மட்டும் பெயராக வழங்கப்படுகிறது. குழந்தைகளைப்