உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

பெய்துதூர்க் கின்ற வண்ணம்

விலாப்புடை பெரிதும் வீங்க

ஐயன தருளி னால்யான்

அந்தணர்1 தொழிலே னானேன்.

சுரும்புடை யலங்கல் மாலைச்

சுநந்தையும் துணைவன் தானும்

விரும்பினர் எதிர்கொண் டோம்ப

வேழவெந் தீயின் நீங்கி

139

இருந்தேன் என்று அச்சநந்தி முனிவர் தமது வரலாற்றினைக் கூறுகிறார்.

இதிலிருந்து, யானைத்தீ என்னும் நோய் உண்டென்பது தெரிகிறது. இந்த நோய்க்கும் யானைக்கும் யாதொரு தொடர்பும் இல்லையாயினும், யானையின் பெயர் பொருத்திக் கூறப்படுகிறது. யானை என்பதற்கு இங்குப் "பெரிய" என்று பொருள் கொள்ளவேண்டும். யானை பெரியதாக இருப்பதுபோல இந்தப் பசிநோயும் பெரியதாக இருப்பது பற்றி “யானைத்தீ” என்னும் பெயர் வந்ததுபோலும்!

யானைக்கால் என்னும் பெயருள்ள ஒரு நோய் உண்டு. இந் நோயுள்ளவருக்குக் கால் மிகப் பருத்து இருக்கும். பருத்த காலாக இருப்பதனால் அவர்களால் வேகமாக நடக்க முடியாது. இது வாத நீரினால் ஏற்படுகிற நோய். இதனைக் கால்வாதம் என்றும் கூறுவார்கள். ஆனாலும் யானைக்கால் நோய் என்பதே பெருவழக்கு. இந் நோயுள்ளவரின் கால், யானைக்கால்போலப் பருத்துவிடுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டதுபோலும்!

4. காக்கை வலி

மனிதருக்கு ஏற்படும் நோய்களில் “காக்கை வலி” என்பதும் ஒன்று. இந்த நோய் கொண்டவர்கள், திடீரென்று தரையில் விழுந்து விடுவார்கள். கை கால்கள் வலியினால் அசையும். அப்போது அவர்களால் பேசவும் முடியாது. ஆனால், இந்த நோய், காக்கையினால் ஏற்படுவது அன்று. காக்கை வலி என்று ஏன் பெயர் வந்தது என்பது தெரியவில்லை. கால் கைகள் வலிப்பதனாலே கால்கை வலி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். பிறகு, இச்சொல் காக்கை வலி என்று மாறி யிருக்கலாம்.