உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

2.

3.

4.

5.

6.

7.

147

மதுரை மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா சோழ வந்தானுக் கருகிலுள்ள தென்கரை என்னும் ஊரில் உள்ள மூலநாதர் கோயில் சாசனம். இதுவும் சுந்தரபாண்டிய தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இதில் “கழுதை கொண்டுழுது

செம்பியனை சினம் பிரியப்பொருது சுரம்புக ஒட்டியும்” என்று எழுதப்பட்டுள்ளது. S.I.I. Vol. V. No. 300.

திருவையாறு கோயில் சாசனம். ஸ்ரீ ராஜகேசரி பன்மரான உடையார் இராஜாதிராஜனுடைய 32-ஆவது ஆண்டு இதில், கழுதை ஏர் செல நடத்தி வாரடிகை விதைத்து என்று காணப்படுகிறது. S.I.I. Vol. V. No. 520.

66

தஞ்சை மாவட்டம், தஞ்சை தாலுகா; திருவேதிக்குடி, வேதபுரீசுவரர் கோயில் சாசனம்:- இராசகேசரி பன்மரான உடையார் இராசராச தேவரின் 32-வது ஆண்டு. இதில் “கழுதை ஏர் செல நடாத்தி வார்கை விதைத்து” என்று எழுதப்பட்டுள்ளது.

S.I.I. Vol. V. No. 641.

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகாவில் உள்ள சாசனம். இதில், “பொடிபடுத்தி வழுதியர் தம் குடமண்டபங் கழுதையேரிட உழுது புகழக் கதிரவியக் கவடி விச்சி” என்று காணப்படுகிறது.

Inscriptions of Pudukkottai State No. 163.

புதுக்கோட்டைக் குன்றத்தூர்த் தாலூகா, குடுமியாமலை சிகரநாத சுவாமி கோயில் சாசனம். “கழுதை கொடுழுது புகழ்கதிர் விளையக் கவடிவிச்சி” என்று கூறுகிறது. Ins. Pudukkottai No. 166. மேற்படி கோயில் அகிலாண்டேசுவரி கோயில் சாசனம். சோனாடு வழங்கியருளிய சுந்தரபாண்டிய தேவர் காலத்துச் சாசனம். 'கழுதை கொடுழுது கவடிவிச்சி செம்பிய சினம் விரியப் பொருது" என்று கூறுகிறது. Ins. Pudukkottai No. 280.

இதுகாறும் தமிழ் இலக்கியங்களிலிருந்தும் தமிழ் நாட்டுச் சாசனங்களிலிருந்தும் சான்றுகள் காட்டினோம். கழுதை ஏர் உழுகிற வழக்கம் வட நாடுகளிலும் இருந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன. கலிங்க தேசம், ஒட்டர தேசம் முதலிய நாடுகளைக் காரவேலன் என்னும் அரசன் கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் (இற்றைக்கு 2200

ண்டுகளுக்கு முன்பு) அரசாண்டான். ஹாதிகும்பா என்னும்