உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - முனிவர் - தெய்வம்*

சில சொற்கள், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருளில் வழங்கிவருகின்றன. ஒரு காலத்தில் ஒரு பொருளைப் பயந்த ஒரு சொல், பிற்காலத்தில் வேறு புதிய பொருளைத் தருகின்றது. ஒரு சொல்லின் பண்டைய பொருள் வழக்காற்றில் மறைந்து, பின்பு உண்டான புதிய பொருளில் அச்சொல் வழங்கும்போது, பழைய இலக்கியங்களுக்குப் பொருள் காண்பதில் தவறுகள் ஏற்படுகின்றன. இத்தவறுகளினாலே, உண்மைப் பொருள் காணமுடியாமல் இடர்ப்படவேண்டியிருக்கிறது. இத்தகைய சொற்களில் கடவுள் என்னும் சொல்லும் ஒன்று.

இக்காலத்தில், கடவுள் என்னும் சொல் முழுமுதற் பொருளாகிய இறைவனைக் குறிக்கிறது. முழுமுதல் அல்லாத சிறு தெய்வங்களையும், அவ்வத் தெய்வங்களின் அடைமொழிப் பெயருடன் சார்த்தி இச்சொல் வழங்குவதுமுண்டு. உதாரணம் : சுறவுக்கொடிக் கடவுள், கரும்புடைக் கடவுள், கனைகதிர்க் கடவுள், நான்முகக் கடவுள் முதலியன. ஆனால், பண்டைக் காலத்திலே, கடவுள் என்னும் சொல், முற்றத் துறந்த முனிவருக்கும் வழங்கப்பட்டது. க்காலத்தில், இச்சொல் அப்பழைய பொருளை இழந்துவிட்டது. அதனை ஈண்டு ஆராய்வோம்.

66

“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர் மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல

ஓர்இனன் ஒழுகும் என்னைக்குப்

பரியலென் மன்யான் பண்டொரு காலே.

وو

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக அமைந்த இக்குறுந்தொகைப் பாட்டில் (203), துறவியாகிய முனிவர் கடவுள் என்று கூறப்படுவது காண்க. “கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ ஒழுகும்” என்பதற்கு, “முற்றத் துறந்த முனிவரைக் கண்ட காலத்து, *சமயங்கள் வளர்த்த தமிழ்' (1966) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.