உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

66

159

கொள்ளும் பயன்ஒன் றில்லாத கொங்கை தன்னைக் கிழக்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன்மார்பில் எறிந்துஎன் அழலைத் தீர்வேனே

என்று தலைமகள் தன் கருத்தைக் குறிப்பாகக் கூறுகிறாள். இவ்வாறு மங்கையர் தமது காதல் வாழ்க்கையைத் தமது கொங்கை மேல் பொருத்திக் கூறுவது அக்காலத்து வழக்கம் எனத் தோன்றுகிறது. பெண்மணியாராகிய நாச்சியாரே இன்னொரு இடத்திலும் இச் செய்தியை கூறுகிறார். திருவரங்கப் பெருமானிடத்தில் அளவற்ற காதல் கொண்டு அவனையே மணந்து இன்புறக் கருதியிருந்த நாச்சியார், தன்னைத் தன் கருத்துக்கு மாறாக வேறு ஒருவருக்கு மணஞ்செய்து கொடுத்தால், தமது உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். அவ்வாறு கூறுகிறவர் தமது காதல் இன்பத்தைத் தமது கொங்கைமேல் ஏற்றிக் கூறுகிறார். அப்பகுதி இது:

66

ஊனுடை ஆழி உத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்த என்தடமுலைகள்

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

இதனால், கற்புடைய மங்கையர்தம் காதல் வாழ்வு, இன்ப வாழ்க்கை அவர்தம் கொங்கை மேல் வைத்துக் கூறப்படுவது காண்க. திருவள்ளுவரும்,

66

“கல்லாதான் சொல்கா முறுதல், முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காழற் றற்று.

என்னும் திருக்குறளில், மகளிர்தம் காதல் வாழ்க்கையை அவர் தம் கொங்கைமேல் வைத்துக் கூறியதும் ஈண்டுக் கருதத்தக்கது.

எனவே, தாம் விரும்பிய காதலன் தனக்குக் கிடைக்காவிட்டாலும், அல்லது, தம்கணவர் தம்மைப் புறக்கணித்துவிட்டாலும் கற்புடைய மங்கையர் கொங்கை (இன்பவாழ்க்கை) பயனற்றது, இறந்துவிட்டது என்பதைக் குறிப்பதே "கொங்கை குறைத்தல் முலையறுத்தல் என்னும் சொல்லின் கருத்து எனத் தோன்றுகிறது. இக்கருத்தை யுட் கொண்டு, நாச்சியார் திருமொழியை மீண்டும் ஊன்றிப்படித்தால் இதன் உண்மைப் பொருள் நன்கு விளங்கும்.