உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -18

முடிந்த முடிவு என்பது எமது கருத்து. இப்பொருள் பொருந்தாது என்று கருதுவோர் காரணங்காட்டி வேறு செம்பொருள் கூறுவாராயின், அக்கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத் தடை யில்லை. உண்மை காண வேண்டும் என்னும் ஒரே கருத்துடன் இவ் வாராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டதாகலின், ண்மையாராயும் நோக்க முடையோர் இதனைப் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்டு முடிவு காணவேண்டும் என்பது எமது ஆசை.

"

குறிப்பு :நற்றிணைச் செய்யுளில் கூறப்படும் திருமாவுண்ணியாரும், சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கண்ணகியாரும் ஒருவரே என்று திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய "பத்தினி தேவியைப்பற்றிய சில குறிப்புகள்” என்னும் கட்டுரையில் கூறுகிறார்கள். அதில், அவர்கள் கண்ணகி யாருக்குத் திருமாவுண்ணியார் என்னும் பெயர் உண்டென்று வலிந்து பொருள் கொண்டு கூறுவது பொருந்தவில்லை. அன்றியும், கண்ணகியார் வேங்கைமரத்தின் அடியில் நின்றார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வேங்கைமரத்தின் மேல் அமைக்கப்பட்ட இதணத்தில் (பரணில்) இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. மேலும், கண்ணகியாரை ஏதிலாளன் ஒருவன் வேங்கைமரத்தண்டை துன்புறுத்திய தாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. வேங்கைமரத்தின்மேல் பரணில் இருந்தவளும் அங்கு ஏதிலாளனால் துன்பத்திற் குள்ளானவளும் திருமாவுண்ணி என்னும் வேறொரு மகளாவள். ஒருமுலையை யறுத்தெறிந்தவள் என்று பொருள் கொண்டு, அவ்வாறு செய்தவர் கண்ணகியார் ஒருவரே எனவும் கொண்டு, அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள். ஆனால், திருமாவுண்ணியாரும் கண்ணகியாரும் வெவ்வேறு மகளிர் என்று ஆராய்ச்சியினால் விளங்குகிறது. வாசகர்கள் இதனையும் ஆராய்ந்து உண்மை காண்பாராக.